புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு ரெனோ கார் நிறுவனம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் மஹிந்திரா கூட்டணியிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தனி ஆவர்த்தனத்தை துவங்கியது. முதலில் தடுமாறினாலும், பின்னர் இந்திய கார் சந்தையின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து பார்த்து, பிரத்யேகமான கார்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

அதாவது, வர்த்தக வாய்ப்புள்ள ரகத்தில் இந்தியாவுக்காக பிரத்யேக கார்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது. ரெனோ கார் நிறுவனத்தின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

அந்நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கிய க்விட் கார் பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்து ட்ரைபர் என்ற மினி எம்பிவி மூலமாக குறிப்பிடத்தக்க விற்பனையை சாதித்து வருகிறது. அடுத்ததாக, காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

இந்த சூழலில், அடுத்ததாக இந்தியாவுக்காக பிரத்யேக காம்பேக்ட் செடான் காரை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் சிஎம்எஃப்-ஏ ப்ளஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் உள்ளிட் கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், போட்டியாளர்களைவிட விலை குறைவாகவும், மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

புதிய காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் புதிய காம்பேக்ட் செடான் காரை ரெனோ கார் நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ!

ரெனோ கார் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் குறித்த தகவலை ரெனோ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

Source: NDTV Auto

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
According to media report, French car maker Renault is working on a all new compact sedan car for india.
Story first published: Tuesday, October 29, 2019, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X