புதிய ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை விபரம் வெளியீடு!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசீகரமான புதிய ஹெட்லைட் மற்றும் க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. முன்புற பம்பர் அமைப்பும் மாற்றங்களுடன் மிக கம்பீரமான தோற்றத்தை தருகிறது. புதிய பானட் அமைப்பு சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய ரெனோ டஸ்ட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் உட்புறத்தில் கருப்பு மற்றும் இளம் பழுப்பு வண்ணத்திலான இன்டீரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் கன்சோலில் புதிய ஏசி வென்ட் அமைப்பு உளளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைனிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். கூல்டு க்ளவ் பாக்ஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎஸ் பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைககும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். இதே டீசல் எஞ்சின் 85 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும். 110 பிஎஸ் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், 85 பிஎஸ் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். இந்த மாடலில் முக்கிய விஷயமாக, பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்துள்ளது. டீசல் மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் வந்துள்ளது முக்கிய விஷயமாக இருக்கும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் புதிய நீல வண்ண தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தனித்துவமான வண்ணத் தேர்வாக அமையும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் மூன்று வேரியண்ட்டுகளிலும், 85 பிஎஸ் டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும், 110 பிஎஸ் டீசல் மாடல் 4 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.7.99 லட்சத்திலும், 85 பிஎஸ் டீசல் மாடல் ரூ.9.29 லட்சத்திலும், 110 பிஎஸ் டீசல் மாடல் ரூ.11.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault India has launched the facelifted version of the Duster SUV in India at Rs 7.99 lakh, ex-showroom.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X