ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

அனைத்து நிறுவனங்களுமே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார கார்களை அறிமுகம் செய்யத் துவங்கிவிட்டன. இந்த நிலையில், ரெனோ கார் நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

டெல்லியில் நடந்த புதிய ரெனோ ட்ரைபர் காரின் அறிமுக நிகழ்ச்சியில், முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்து ரெனோ நிறுவன அதிகாரியிடம் செய்தியாளர்கள் வினவினர். அப்போது, கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தால், வரும் 2022ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

இதன்மூலமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று ரெனோ தரப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் கே-இசட்இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. சீனாவில் அண்மையில் நடந்த ஷாங்காய் ஆட்டோ ஷோவில் இந்த கார் வெளியிடப்பட்டது.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனில் சில மாற்றங்களுடன் இது எலெக்ட்ரிக் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

ரெனோ கே-இசட்இ எலெக்ட்ரிக் காரில் 33kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் அதிகபட்சமா 120 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் இருககும் பேட்டரியை சாதாரண வீட்டுச் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றலாம். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்ததினால், 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் நிரப்பிவிடலாம்.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்கும். நகர்ப்புற பயன்பாட்டுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் கூட பயன்படுத்த ஏதுவான சிறிய வகை எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.

ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அங்கு எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருவதால், இந்த முடிவை ரெனோ எடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கை மேம்படும் என்பதால், நிச்சயம் இந்த புதிய ரெனோ கே-இசட்இ எலெக்ட்ரிக் காரை ரெனோ குறிப்பிட்ட கால அளவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
French auto manufacturer Renault said that the company will be ready to launch electric vehicles in India by 2022 provided the government aggressively develops the ecosystem and infrastructure before forcing launches in the country.
Story first published: Thursday, August 29, 2019, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X