இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

பிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனோ நிறுவனம், அடுத்த மாதம் தனது அடுத்த உற்பத்தி வாகனமான க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது கசிந்துள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

இந்த போட்டோக்களில் இருந்து பார்க்கும்போது, ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறங்கள் கருப்பு நிறத்தில் இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டுஆட்டோ செயலிகளை இணைக்கும் செய்யும் வசதியுடைய மிக பெரிய தொடுத்திரையுடன் வர உள்ளது. சமீபத்தில் வெளியான ரெனோ ட்ரைபர் எம்பிவி தொடுத்திரையை இது நினைவூட்டுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

க்விட் காரின் பெயரில் வெளிப்புறத்தில் கதவில் பெரியதாகவும் உட்புறத்தில் தொடுதிரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பவர் விண்டோவிற்கான பொத்தான் தொடுத்திரைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே ஏசிக்கான பொத்தான் தரப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

காரின் வேகம், ஓடிய தூரம் உள்ளிட்ட தகவல்களை பெற உதவும் முழுமையான மின்னணு திரை அமைப்புடன் கூடிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிறம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கே-இசட் எலெக்ட்ரிக் காரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட்டில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய இரு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மத்தியில் கீழாக ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. மெல்லிய க்ரில் காருக்கு முன்புறமாக இரு விளக்குகளையும் இணைப்பது போல புதிய வடிவில் உள்ளது. பம்பரும் புதிய வடிவில் மாற்றப்பட்டு காற்று புகும் பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

பின்புற சிவப்பு விளக்குகள் C-வடிவில் கே-இசட்இ மாடலில் உள்ளது போல் உள்ளன. ரெனோவின் எந்தவொரு மாடலிலும் இல்லாத வகையில் காரின் மேல் புறத்தில் மஞ்சள் நிறத்தில் கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

காரை இயக்கும் மற்ற முக்கிய பாகங்களை பார்த்தால், எதுவும் மாற்றப்படவில்லை. இன்ஜின் அதே முந்தைய மாடலில் உள்ள தரத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த க்விட் ஃபேஸ்லிப்ட்டில் இரு பெட்ரோல் என்ஜின் அமைப்பு தரப்பட்டுள்ளன. ஒன்று 800சிசியில் 54பிஎச்பி பவரையும் 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மற்றொரு 1 லிட்டர் என்ஜின் 68பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

என்ஜினின் பவரானது 5 நிலை வேகங்களில் செயல்படும் மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக முன்புற சக்கரங்களுக்கு அனுப்பப்படும். ஆனால், 1 லிட்டர் என்ஜின் 5 நிலை வேகங்களை வழங்கும் ஆட்டோமேட்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது. இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதன் முழு தகவல்கல் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

க்விட் கார் இந்திய மார்க்கெட்டிற்கு வந்து நீண்ட காலமாகி விட்டது. எப்படியிருந்தாலும் ரெனோ க்விட்டின் இந்த மாடல் கார் சுகமான பயணத்தை தான் தர போகிறது. மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக களமிறங்கவுள்ள இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம் வரை விற்பனையாகலாம் என தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
New (2019) Renault Kwid Facelift Interiors Spied Ahead Of India Launch: Spy Pics & Details
Story first published: Friday, September 27, 2019, 20:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X