உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புதிய ரெனால்ட் க்விட் கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வேகமாக தயாராகி வருகிறது. தற்போது க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சோதனை செய்யும் இறுதி கட்ட பணிகளில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனவே க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்விட் கேஇஸட்இ (Kwid KZE) எலெக்ட்ரிக் கார் அடிப்படையில், புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் டிசைன் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி க்விட் கேஇஸட்இ போலவே, க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட் அப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெயில் லேம்ப்பில் எல்இடி விளக்குகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளன. வெளிப்புறத்தில் இதுபோல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாற்றங்கள், க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் ரெனால்ட் ட்ரைபர் காருடன், ஒரு சில இன்டீரியர் பாகங்களை க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் பகிர்ந்து கொள்ளும் என தெரிகிறது. இதில், ரீ டிசைன் செய்யப்பட்ட டேஷ் போர்டும் அடங்கும். அத்துடன் சிறப்பான காற்றோட்டத்திற்காக ரீ டிசைன் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

ட்ரைபர் காரில் இருக்கும் அதே ஸ்டியரிங் வீல் யூனிட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் வழங்கப்படவுள்ளது. இதுதவிர க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ட்ரைபர் காரில் இருப்பதுதான்.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

ஆனால் தற்போதைய க்விட் காரில் உள்ள அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்தான் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் வழங்கப்படவுள்ளன. அதேபோல் பவர் அவுட்புட்டும் தற்போது உள்ளதை போலவேதான் இருக்கும். இதன்படி 800 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 54 எச்பி பவர், 72 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் பெரிய 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 68 எச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அத்துடன் தற்போதைக்கு பிஎஸ்-4 இன்ஜின் உடன்தான் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தொடரவுள்ளது. எனினும் 2020 ஏப்ரல் மாத காலக்கெடுவிற்கு நெருக்கமாக ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்-6 இன்ஜின்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்த வரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படும். இதுவும் தற்போது உள்ள மாடலில் இருந்து அப்படியே கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது உள்ள மாடலை காட்டிலும் பாதுகாப்பு என்ற விஷயத்தில் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தலைசிறந்து விளங்கும்.

உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

ஏனெனில் வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு இணங்கும் வகையில், இதன் கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதேபோல் புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள மாடலில் ஒரு ஏர் பேக் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Facelift Launch Scheduled For September 2019: Features New Dashboard Design & More. Read in Tamil
Story first published: Tuesday, August 27, 2019, 23:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X