புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

ரெனால்ட் நிறுவனம் அதன் பட்ஜெட் ரக ஹேட்ச்பேக் மாடலான க்விட் காரினை அறிமுகம் செய்வது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

ரெனால்ட் நிறுவனம் அதன் ஹேட்ச்பேக் மாடலான பட்ஜெட் விலையில் விற்பனையாகும் கிவிட் காரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், புதுப்பிக்கப்பட்ட க்விட் மாடல் காரை அந்த நிறுவனம் அண்மையில் பரிசோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் சமீபகாலங்களாக இணையத்தில் உலா வருவதை நாம் அனைவரும் கண்டிருப்போம்.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

தற்போது, இந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் க்விட் காரின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த கார் நடப்பாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

புதிதாக அப்கிரேட் செய்யப்பட்டிருக்கும் இந்த க்விட் கார், 2019 ஷாங்காய் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கே-இசட்இ எலக்ட்ரிக் காரைப் போன்றே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், கே-இசட்இ மாடலின் முக்கிய டிசைன் தாத்பரியங்களை, 2019 க்விட் கார் பெற்று அசத்தலாக காட்சியளிக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

அவ்வாறு, க்விட் காரின் புதிய மாற்றமாக, ஸ்பிலிட் ஹெட்லைட் எல்இடி டிஆர்எல் மின் விளக்குகள் காரின் முன்பக்கத்தில் உள்ள கிரில் அமைப்பிற்கு அருகில், பம்பருக்கு கீழே பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் புதிய வடிவிலான பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இவை காரின் தோற்றத்திற்கு மிகவும் மாடர்னான லுக்கினை வழங்குகின்றது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

இதைத்தவிர, காருக்கு மேலும் சிறப்பு கூட்டும் வகையில், இதன் கட்டுமானத்திலும் சில மாற்றங்களை ரெனால்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிதாக கொடுக்கப்பட்டுள்ள இந்த கட்டுமானம், கிராஷ் டெஸ்டில் நல்ல மதிப்பெண்ணைப் பெற உதவும்.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

இந்த காரின் இன்டீரியர் டிசைனில் எந்த அளவிற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற தககவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், பழைய க்விட் மாடலைக் காட்டிலும் அப்கிரேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த புதுப்பிக்கப்பட்ட க்விட் காரில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

இத்துடன், கே-இசட்இ மாடலில் இடம் பெற்றிருந்ததைப் போன்று, அப்ஹோல்ட்ரி ஆப்ஷன் மற்றும் புதிய இன்ட்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகியவை புதிய க்விட் மாடலிலும் இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

ரெனால்ட் நிறுவனத்தின் இந்த புதுப்பிக்கப்பட்ட க்விட் கார் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்ஜின் ஆப்ஷனில் வர இருக்கின்றது. இதே எஞ்ஜின்கள்தான் பழைய மாடல் க்விட்காரிலும் பொருத்தப்பட்டிருந்தது.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

இதில், 0.8 லிட்டர் எஞ்ஜின் 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. அதேபோன்று, 1.0 லிட்டர் எஞ்ஜின் 68 பிஎச்பி பவரையும், 91என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதுப்பிக்கப்பட்ட கவர்ச்சியுடன் களமிறங்கும் ரெனால்ட் க்விட்: அறிமுகம் குறித்த தகவல்!

இத்தகைய சிறப்பான புதுமைகளைப் பெற்றுள்ள ரெனால்ட் க்விட் கார் நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் எம்பிவி மற்றும் டஸ்டர் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Facelift To Launch In India By End Of The Year. Read In Tamil.
Story first published: Tuesday, April 30, 2019, 20:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X