புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக வலம் வரும் ரெனோ க்விட் கார் அரசு கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்பொலிவும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஸ்பை படங்களில் புதிய ரெனோ க்விட் காரின் முகப்பு டிசைனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதாவது, இப்போது வரும் எஸ்யூவி கார்களை போலவே, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பம்பரில் இணைந்தாற்போல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பானட்டை ஒட்டி இண்டிகேட்டர் மற்றும் பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

கடந்த ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கே-இசட்இ காரின் (எலெக்ட்ரிக் மாடல்) அடிப்படையிலான முகப்பு டிசைனை பெற்றிருக்கிறது. க்ரில் அமைப்பும் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய ரெனோ க்விட் காரில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, மீடியாநவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. அதேபோன்று, பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வர இருப்பதாக தெரிகிறது.

ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முக்கிய அம்சமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ரெனோ க்விட் கார் வடிவமைப்பில் மிகவும் மிடுக்காக மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வாய்ப்புள்ளது. அதுவும் மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் என்பதால் தனது சந்தையை தக்க வைத்துக் கொள்ளும்.

புதிய ரெனோ க்விட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ உள்ளிட்ட பட்ஜெட் கார் மாடல்களுடன் புதிய ரெனோ க்விட் கார் போட்டி போடும். பட்ஜெட் கார் ரகத்தில் தனித்துவமான தேர்வாக இருக்கும்.

Source: Power Stroke PS

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault Kwid Facelift Spied Testing in India.
Story first published: Saturday, July 13, 2019, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X