புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்!

ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. டிசைனிலும், வசதிகளிலும் பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் இந்த கார் வர இருக்கிறது.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும் இந்த புதிய மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

சீனாவில் அண்மையில் விற்பனைக்கு வந்த க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனான K-ZE காரின் டிசைன் அம்சங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் முகப்பு டிசைன் முற்றிலும் மாறி இருக்கிறது.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ க்விட் காரின் டாப் வேரியண்ட்டாக விற்பனையில் இருக்கும் க்ளிம்பர் மாடலின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், முகப்பு டிசைன் முற்றிலும் புதிதாக மாறி இருக்கிறது.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஆகியவை மாறி இருக்கின்றன. இதைத்தவிர்த்து, பெரிய மாற்றங்கள் தென்படவில்லை.

ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய ஸ்பைபடங்கள்

பின்புறத்தில், டெயில் லைட் டிசைனில் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஸ்கிட் பிளேட்டும் உள்ளன. சாதாரண மாடலைவிட கூடுதல் வசீகரம் மிக்கதாக ஆரஞ்ச் வண்ண அலங்காரத்துடன் க்ளைம்பர் மாடல் வர இருக்கிறது.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

ட்ரைபர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஸ்டீயரிங் வீல் அமைப்பு மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய ரெனோ க்விட் காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதைத்தவிர்த்து, பெரிய மாற்றங்கள் தெரியவில்லை.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ க்விட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலன் புதிய ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ க்விட் காரில் டிரைவர் பக்கத்துக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்

புதிய ரெனோ க்விட் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டிபோடும். விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

ஸ்பை படங்கள் உதவி: காடிவாடி

Most Read Articles

மேலும்... #ரினால்ட்
English summary
French automaker, Renault is all set to launch a facelift version of their Kwid hatchback in India. The upcoming Renault Kwid Climber facelift model was spied in its undisguised form ahead of its launch.
Story first published: Sunday, September 22, 2019, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X