மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக ரெனோ நிறுவனத்தில் இருந்து களமிறங்கவுள்ள க்விட் கிளிம்பர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய ஸ்னீக்பீக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

ரெனோவின் க்விட் மாடல் கார் 2015ல் இந்திய மார்கெட்டில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நாளை அறிமுகமாகவுள்ள ரெனோ நிறுவனத்தின் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட் மாடல் கார், அதன் அனைத்து ஷோரூம்களிலும் ஏற்கனவே சென்றடைந்துவிட்டது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

இந்த புதிய மாடல் மெல்லிய முன்புற விளக்கையும் அதற்கு அடியில் துணை விளக்குகளையும் கொண்டுள்ளது. ரெனோ நிறுவனம் அதன் உலகளாவிய வடிவமைப்பு அடையாளத்துடன் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கிரில்லை மாற்றியமைத்துள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

பக்கவாட்டில் ரப்-ஸ்ட்ரிப்ஸ், கருமையான ஹப்-கேப்ஸ் மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் காருக்கு மேல் புறத்தில் டிசைன்கள் என கிரில்லிலும் இந்த கிளிம்பர் மாடல் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இவையே மற்ற மாடல்களில் இருந்து இந்த புதிய வெர்சன் காரை வேறுப்படுத்தி காட்டுகின்றன.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள நியர்-பிளாட் ஷீட் இக்காருக்கு அழகான ஸ்டைலை கொடுக்கிறது. இதுகுறித்து முழு தகவல்கள் கீழேயுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

உள்ளே பார்த்தால், புதியதாக அறிமுகமான ட்ரைபர் காரில் உள்ளது போல் புது தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடுதிரை அமைப்பை சுற்றி ஆரஞ்ச் நிறத்தில் சதுர வடிவில் எல்லை, வித்தியாசமான டிசைனில் ஸ்டீயரிங், ஒழுங்கமைப்பட்ட கதவுகள் மற்றும் இருக்கைகளை சுற்றி ஒரே நிறமாக கியருக்கு கொடுக்கப்பட்ட ஆரஞ்ச் நிறத்தில் கவர்ஸ் என இன்னும் பல அம்சங்கள் உள்ளன.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

ஏர்பேக்ஸ் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ்- பிரேக்கிங் சிஸ்டமும் இந்த புதிய க்விட் கிளிம்பர் ஃபேஸ்லிஃப்ட்டில் தரப்பட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு அமைப்பு, ரிவர்ஸ் பார்கிங் சென்சார், முன்புற இருக்கைகளில் சீட் பெல்ட் ஆகியவை பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் இரு பிஎஸ்-4 என்ஜின்களுடன் அறிமுகமாகவுள்ளது. 2020 ஏப்ரலுக்குள் இந்த மாடல் கார்களில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் 0.8 லிட்டர் என்ஜின், 54 பிஎச்பி பவரையும் 72 என்எம் டார்க் திறனையும், 1 லிட்டர் என்ஜின் 68பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ வெளியீடு

இரண்டு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கூடுதலாக ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 2019 ரெனோ க்விட் கிளிம்பர் ஃபேஸ்லிஃப்ட், அதன் போட்டியாளராக கருதப்படும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் அதன் முந்தைய வெர்சன்களை விட அதிக விலையில் விற்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
The initial response garnered by the Renault Kwid back in 2015 clearly demonstrated that there is a huge market for low-cost crossover-ish hatchback in India. This has inspired Maruti to come up with the S-Presso. Renault has timed the introduction of its Kwid Climber facelift in a bid to counteract the Maruti S-Presso which is set to be launched today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X