Just In
- 15 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...
உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிக மலிவான விலை ரெனால்ட் காரின் உலக அளவிலான வெளியீடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த காரின் அதிகாரப்பூர்வ பெயர் கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அறிவிக்கப்பட்டது.

இதன்படி அந்த காருக்கு ட்ரைபர் (Renault Triber) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனால்ட் ட்ரைபர் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெனால்ட் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் ட்ரைபர் காரை களமிறக்க முடிவு செய்திருப்பதே இதற்கு காரணம்.

அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. ரெனால்ட் நிறுவனம் தற்போது ட்ரைபர் காரை இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இதன் ஸ்பை படங்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற செய்துள்ளன.

இந்த சூழலில் ரெனால்ட் ட்ரைபர் காரின் உலக அளவிலான வெளியீடு இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை வரும் ஜூன் 19ம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. அப்போது ட்ரைபர் கார் உலகின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

இதன்பின் பண்டிகை காலத்தில் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அனேகமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரெனால்ட் டரைபர் கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்திய மாடல் லைன் அப்பில், க்விட் ஹேட்ச்பேக் மற்றும் டஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இடையே ட்ரைபர் நிலைநிறுத்தப்படவுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாருதி சுஸுகி எர்டிகாதான்.

அந்த மாருதி சுஸுகி எர்டிகாவுடன்தான் ரெனால்ட் ட்ரைபர் போட்டியிடவுள்ளது. ஆனால் எர்டிகாவை காட்டிலும் மலிவான விலையில் ரெனால்ட் ட்ரைபர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே ரெனால்ட் ட்ரைபர் வடிவில் எர்டிகாவிற்கு கடும் சவால் வரப்போகிறது.

ரெனால்ட்-நிஸான் குடும்பத்தின் பல்வேறு கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்மின் பெரிதும் மாடிஃபை செய்யப்பட்ட வெர்ஷன் அடிப்படையில்தான் ட்ரைபர் கார் கட்டமைக்கப்படவுள்ளது. அதிகமான அதே சமயம் அட்வான்ஸ்டு வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது.

மூன்று வரிசை, 7 இருக்கை என்ற அமைப்பில் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் 7 சீட்டர் மாடலாக இருந்தபோதும் கூட மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோவை காட்டிலும் இதன் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும்.

பெரும்பாலான இதர எம்பிவி ரக கார்களை போல் அல்லாமல், ரெனால்ட் ட்ரைபர் காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளை தேவைப்பட்டால் நீக்கி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைவான பயணிகள் மற்றும் அதிக லக்கேஜூடன் பயணிக்கலாம்.

அல்லது அதிகமான பயணிகள் மற்றும் குறைவான லக்கேஜுடன் செல்லலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இதனை முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட இருப்பது சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

ட்ரைபர் காரின் முன் பக்க டிசைன், ரெனால்ட் க்விட் காரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதை போல் தெரிகிறது. ஸ்பை புகைப்படங்கள் அதனை உறுதி செய்கின்றன. இன்டீரியரை பொறுத்தவரை கருப்பு, பழுப்பு வண்ணத்துடன் கூடிய புதிதாக டிசைன் செய்யப்பட்ட டேஷ் போர்டுடன் ட்ரைபர் வரவுள்ளது.

இதுதவிர ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் கூடிய பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இன்ஜின் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

எனினும் டர்போசார்ஜ்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் நிஸான் மைக்ரா காரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் திட்டவட்டமாக ஒதுக்கி விட முடியாது.

அதேபோல் ரெனால்ட் க்விட் காரில் கிடைக்கும் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினை ட்ரைபர் காரில் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறி விட முடியாது. அதே சமயம் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு வரவுள்ளது.

இபிடி உடனான ஏபிஎஸ், ஸ்டாண்டர்டாக ட்யூயல் ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ட்ரைவ் ஸ்பீட் அலர்ட் உள்ளிட்ட வசதிகள் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரெனால்ட் ட்ரைபர் காருக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால் வெற்றி ரெனால்ட் நிறுவனத்தின் கையில்.