விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

பண்டிகை காலத்தில் களமிறக்கப்பட்ட புத்தம் புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் விற்பனையில் கலக்கி வருகிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

இந்தியாவுக்காக ரெனோ நிறுவனம் உருவாக்கிய க்விட் கார் சூப்பர் ஹிட் மாடலாக மாறியது. அதே எதிர்பார்ப்புடன் ரெனோ நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கிய இரண்டாவது கார் மாடல்தான் ட்ரைபர். 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்ட இந்த மினி எம்பிவி கார் 7 சீட்டர் மாடலாக வந்தது.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

அட்டகாசமான தோற்றம், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் 4,710 ட்ரைபர் கார்கள் விற்பனையானதால், ரெனோவுக்கு உற்சாகம் பீறிட்டது.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

இதையடுத்து, கடந்த மாதம் பண்டிகை காலத்திலும் ரெனோ ட்ரைபர் காரின் விற்பனை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் 5,240 ரெனோ ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால், ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனையில் புதிய உத்வேகம் பிறந்துள்ளது.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

மேலும், ரெனோ ட்ரைபர் காரின் விற்பனை இரண்டு மாதங்களில் 10,000 என்ற புதிய எண்ணிக்கையை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட, அக்டோபரில் விற்பனை 11.25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

புதிய ரெனோ ட்ரைபர் கார் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கலாம். முதலில் இது மிக குறைவான விலையில் அசத்தலான அம்சங்கள் கொண்ட 7 சீட்டர் மாடலாக இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் உட்புறத்தில் இருக்கை வசதியை மாற்றிக் கொள்ளலாம்.

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

MOST READ: தரமான சம்பவம்... ஒரு பைக்கின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான ரியல் ஹீரோ... என்ன செய்தார் தெரியுமா?

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

பின் இருக்கை பயணிகளுக்காக தனித்தனி ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயங்களாக உள்ளன.

MOST READ: பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம்... போலீஸை அலற விட்ட பாசக்கார தந்தை...

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

MOST READ: பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... யாருகிட்டயும் சொல்லீராதீங்க...

விற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்!

டிசைன், வசதிகள், சிறப்பம்சங்கள், விலை, 7 பேர் பயணம் செய்வதற்கான வாய்ப்பு என அனைத்திலும் மதிப்புடைய கார் மாடலாக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கிடைப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Triber MPV launched in India two months back. The Triber is a completely new product from the French car brand in the Indian market. Since its launch, the sub-4 metre MPV has been received extremely well in the country.
Story first published: Friday, November 8, 2019, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X