புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

ஸ்கோடா விஷன் எக்ஸ் என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையில் கமிக் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கமிக் எஸ்யூவியின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

ஸ்கோடா விஷன் எக்ஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் கமிக் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் படங்கள், விபரங்களை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

ஸ்கோடா கோடியாக், கரோக் எஸ்யூவி மாடல்களிலிருந்து வித்தியாசமான சில டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, கமிக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளின் டிசைன் வித்தியாசப்படுகிறது. எல்இடி பகல்நேர விளக்குகளே, இன்டிகேட்டர்களாகவும் செயல்படும் விதத்தில் உள்ளது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

ஆடி கார்களை போலவே, சீரியல் லைட் போன்று ஒளிரும் இண்டிகேட்டர் விளக்குகள் இடம்பெற்றுள்ளது. ஸ்கோடா லோகோவுக்கு பதிலாக, ஸ்கோடா நிறுவனத்தின் பெயர் மற்றும் பேட்ஜ் மட்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 4,241 மிமீ நீளமும், 2,651 மிமீ வீல்பேஸும் பெற்றிருக்கிறது. இதனால், உட்புற இடவசதி மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், இந்த எஸ்யூவியில் 400 லிட்டர் பூட்ரூம் உள்ளது. இருக்கைகளை மடக்கும்போது 1,395 லிட்டர் வரையிலான பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், 10.25 அங்குல மின்னணு திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது. ஆம்பியன்ட் லைட்டிங், தரமான இன்டீரியர் பாகங்களுடன் அசத்தலாக வர இருக்கிறது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

இந்த எஸ்யூவியில் பன்முனை பாதுகாப்பு வழங்கும் விதத்தில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லேன் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், போக்குவரத்து நெரிசல் குறித்த நிகழ்நேர தகவல்கள், ரியர் வியூ கேமரா, சென்சார்கள் என பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 95 பிஎச்பி பவரை அளிக்கும் ஒரு மாடலிலும், 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இதுதவிர்த்து, 115 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வருகிறது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

இந்த புதிய கமிக் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது.

புத்தம் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி வெளியீடு!

வரும் 2020ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியானது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has unveiled the first set of official images of its latest SUV, the Kamiq. The new Skoda Kamiq SUV will have its public debut at the upcoming 2019 Geneva Motor Show.
Story first published: Tuesday, February 26, 2019, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X