புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

கடந்த 2017ம் ஆண்டு ஸ்கோடா கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த கரோக் எஸ்யூவி களமிறக்ககப்பட்டது. பல வெளிநாடுகளில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

இந்த சூழலில், புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் உற்பத்தியும் இந்தியாவில் துவங்கி விட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

வெளிநாட்டிலிருந்து முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா கார் ஆலையில் புதிய கரோக் எஸ்யூவியின் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கோடியாக் எஸ்யூவியின் கட்டுமானக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய மாடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது 4,382 மிமீ நீளமும், 1,814 மிமீ அகலமும், 1,605 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,638 மிமீ ஆக உள்ளது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 521 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை மடக்கினால் 1,810 லிட்டர் வரை பூட்ரூம் இடவசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

ஸ்கோடா நிறுவனத்தின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ரிஃப்ளெக்டர் அமைப்புடன் கூடிய பின்புற பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to a report from Team-BHP, local production of the Skoda Karoq has already begun, with a launch expected to happen sometime in April or May 2019. The SUV will be imported into the country via a CKD (Completely Knocked Down) kit and assembled in the brand's Aurangabad facility.
Story first published: Saturday, February 23, 2019, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more