ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி சிறந்த தேர்வுகளில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. அசத்தலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் என வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு தகவமைப்புகள் அதிகம் பெற்றிருக்கும் ஸ்கவுட் மாடல் வரும் 30ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதாவது, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ட்ரெயில்ஹாக் போன்றே, ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற அதிக சிறப்பம்சங்களை இந்த கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

சாதாரண கோடியாக் எஸ்யூவியைவிட இந்த ஸ்கவுட் மாடலானது அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. அதேபோனறு, செங்குத்தான நிலப்பரப்புகள் மற்றும் சரிவான பகுதிகளில் இறங்குவதற்கு ஏற்ற வகையில் முன்புற பம்பர் மாற்றங்கள் பெற்றிருப்பதுடன், ஸ்கிட் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவியில் க்ரோம் அலங்கார பாகங்களுடன் கூடிய க்ரில், ஜன்னல் கண்ணாடிகள், ரூஃப் ரெயில்கள் உள்ளன. இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

சாதாரண கோடியாக் எஸ்யூவியில் இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய ஸ்கவுட் மாடலில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் சீட் பேக்ரெஸ்ட் மற்றும் க்ளவ் பாக்ஸ் அறைகளில் ஸ்கவுட் பேட்ஜ் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது தேவைப்படும் பிரத்யேக ஆஃப்ரோடு டிரைவிங் மோடு, அதிக ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் ஆகிய பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி விபரம்!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் விசேஷ அம்சங்கள் பொருந்திய ஆஃப்ரோடு மாடல் என்பதால், அதிக கவனத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. அத்துடன், பிரிமீயம் ஆஃப்ரோடு கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is all set to launch of offroad version of Kodiaq SUV in India on 30th September.
Story first published: Thursday, September 26, 2019, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X