ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஆஃப்ரோடு மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆஃப்ரோடு மாடல்

சாதாரண கோடியாக் எஸ்யூவியின் அதிக ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடல் கோடியாக் ஸ்கவுட் என்ற பெயரில் வந்துள்ளது. இந்த எஸ்யூவியானது ஸ்டைல் மற்றும் லாரின் & க்ளமென்ட் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புற அம்சங்கள்

சாதாரண கோடியாக் எஸ்யூவியிலிருந்து கூடுதல் வசீகரத்தை பெறும் வகையில் ஏராளமான சிறப்பம்சங்களை வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பெற்றுள்ளது. விசேஷ பினிஷிங் செய்யப்பட்ட முன்புற க்ரில் அமைப்பு, சில்வர் வண்ணத்திலான புதிய முன்புற பம்பர் அமைப்பு, பாடி கிளாடிங் சட்டங்கள், 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், முன்புற ஃபென்டர் மற்றும் பின்புற கதவில் ஸ்கவுட் பேட்ஜ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம்

பள்ளம், மேடுகளை எளிதாக சமாளிக்கவும், செங்குத்தான சாலைகளில் ஏறி, இறங்குவதற்கு ஏற்ப தகவமைப்பை பெற்றிருக்கிறது. காரின் அடிப்பாகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண கோடியாக் எஸ்யூவியைவிட கிரவுண்ட் கிளிரயன்ஸ் 6 மிமீ அதிகரிக்கப்பட்டு 194 மிமீ என்ற அளவில் உள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இன்டீரியர்

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பல பிரிமீயம் அம்சங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள், டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் மர அலங்கார வேலைப்பாடுகள், ஸ்கவுட் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரின் விலை உயர்ந்த லாரின் அண்ட் க்ளமென்ட் வேரியண்ட்டில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போரட் செய்யும். இதனுடன், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட 575 வாட் கேன்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முக்கிய அம்சங்கள்

இந்த காரில் 12 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஹேண்ட்ஸ்ப்ரீ பார்க்கிங் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், முழுமையான வெர்ச்சுவல் முறையில் தகவல்கை காட்டும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பூட்ரூம் இடவசதி

இந்த காரில் 270 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், 2,008 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சின்

புதிய கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாமக 150 எச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக செலுத்தப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

விலை விபரம்

புதிய ஸ்கோடா கோடியாக் ஸ்டைல் வேரியண்ட்டிற்கு ரூ.33.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், லாரின் அண்ட் க்ளமென்ட் வேரியண்ட் ரூ.36.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched the Kodiaq Scout, offroad specif variant in India priced at Rs 33.99 lakhs (ex-showroom).
Story first published: Monday, September 30, 2019, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X