புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, தனது பிரபல கார் மாடலான ஆக்டேவியாவின் அடுத்த தலைமுறை காரை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை ஆக்டேவியா காரின் படங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலிஷான புதிய க்ரில் அமைப்பு மற்றும் எல் வடிவிலான பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய இரட்டை எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பரிமாண அளவுகளாக காரின் நீளம் 4,689 மிமீ ஆகவும், அகலம் 1,829 மிமீ ஆகவும், காரின் உயரம் 1,470 மிமீ ஆகவும் உள்ளது. இந்த புதிய ஸ்கோடா காரின் வீல்பேஸ் 2,686 மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

ஃபாக் விளக்குடன் உள்ள காரின் பம்பரும் புதிய டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள பம்பரும் முன்புற பம்பரின் டிசைனிற்கு ஏற்ற வடிவில் புதுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஸ்கோடாவின் இந்த புதிய தலைமுறை காரின் முன்புறம் மற்றும் பின்புற பகுதிகள் மிகவும் முரட்டுத்தனமான அதேநேரத்தில் பார்பதற்கு ஸ்டைலான தோற்றத்தை பெற்றுள்ளன.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

இதுதவிர இந்த கார் ஜன்னல்களில் கொடுக்கப்பட்டுள்ள பார்டர் நிறத்தையே சன்ரூஃபும் கொண்டுள்ளது. நிறம் மட்டுமின்றி இவற்றின் தோற்றமும் முந்தைய மாடலில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. வழக்கமான ஸ்கோடா மாடல்களில் இடம்பெறும் வட்ட வடிவிலான லோகோவிற்கு பதிலாக எழுத்து வடிவிலான லோகோ க்ரில்லின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

உட்புற பாகங்களை பொறுத்த வரையிலும் இந்த புதிய ஸ்கோடா காரில் பல அம்சங்கள் அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. இன்போடெயின்மெண்ட் அமைப்புடன் கூடிய 10 இன்ச் தொடுத்திரை மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டை இந்த காரின் உட்புற பாகங்களில் அடங்கியுள்ளன.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

இரு ஸ்போக்குகளை கொண்ட அதிகமான பல செயல்பாடுகளுக்கு உட்படும் வகையிலான ஸ்டீயரிங் வீல் இந்த புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மூன்று ஸ்போக்குகளை கொண்ட வீல் அமைப்பும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது. மைய கன்சோல் புதிய வடிவத்தை பெற்றுள்ளது. அதேபோல் வழக்கமான கியர் லிவருக்கு பதிலாக ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, மில்ட்-ஹைப்ரீடு மற்றும் ப்ளக்-இன் போன்ற எரிபொருள் வகைகளில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனையாகவுள்ளது. பெட்ரோல் மாடலானது 1.0 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும்1.5 லிட்டர் என்ஜினுடனும், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் மாடலானது 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடனும், ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடனும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

இதில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினுடன் விற்பனையாகவுள்ள ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடலானது 204 எச்பி மற்றும் 245 எச்பி என இரு விதமான ஆற்றல் அளவுகளை வெளியிடும் திறன் கொண்டது. மைல்ட்-ஹைப்ரீட் மற்றும் ப்ளக்-இன் என இரு என்ஜின்களும் 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் டீசல் என்ஜின் ஆல் வீல் டிரைவ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

சிஎன்ஜி வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் மூன்று விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் வர இருக்கிறது. இதனுடன் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக நிலைகளை வழங்கக்கூடிய ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு

முக்கிய உதிரிபாகங்கள் சிகேடி முறையில் இந்தியாவில் இறக்குமதியாகி அசெம்பிள் செய்யப்பட்டு இந்த புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த காரின் அறிமுகம் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் நடக்கும் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.16 லட்சம் முதல் 22 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia 2020 Revealed: India Launch Details And Expected Price
Story first published: Tuesday, November 12, 2019, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X