டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

டாடா நெக்ஸான் காரின் அடிப்படையிலான மின்சார எஸ்யூவி மாடல் நாளை மறுதினம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் வருவதுடன், ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் வரும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கிய விபரங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸிப்ரான் தொழில்நுட்பத்துடன் வர இருக்கும் இந்த காரின் ரேஞ்ச், மின் மோட்டார், பேட்டரி என இந்த காரில் பல்வேறு தகவல்களை தொடர்ந்து காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

விசேஷ அம்சம்

டாடா நெக்ஸான் காரில் பேட்டரியானது தரை தளத்தில் பொருத்தப்ப்டடுள்ளது. இதனால், பாடி ரோல் எனப்படும் கார் நிலைத்தன்மையை இழக்கும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. விபத்து வாய்ப்பையும் தவிர்ப்பதுடன், கையாளுமையும் ஜோராக இருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

பேட்டரி

டாடா நெக்ஸான் காரில் 28.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியானது 129 எச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் நெக்ஸான் எஸ்யூவியைவிட இந்த மின்சார மாடல் அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

ரேஞ்ச்

டாடா நெக்ஸான் காரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த காருக்கு வழங்கப்படும் வீட்டு சார்ஜர் மூலமாக மின் ஏற்றம் செய்வதற்கு 8 முதல் 9 மணிநேரம் பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்துவிட முடியும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

வாரண்டி

பேட்டரி கார்களில் மிக முக்கிய பாதகமான அம்சமாக கூறப்படுவது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பேட்டரியை மாற்ற வேண்டிய பிரச்னை உள்ளது. அதுவும், இது கணிசமாக செலவு வைக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படும்.

MOST READ: புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

பரிமாணம்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் 3,995 மிமீ நீளமும், 1,811 மிமீ அகலமும், 1,607 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் அதே 2,498 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கும்.

MOST READ: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

க்ரவுண்ட் க்ளியரனஸ்

பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பு காரணமா, சாதாரண நெக்ஸான் கார் 215 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த கார் 209 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். பின்புறத்தில் டார்சன் பீம் கொண்ட செமி இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

வசதிகள்

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகல், பவர் ஃபோல்டிங் விங் மிரர்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், பவர் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட், கையில் அணிந்து கொள்ளக்கூடிய ஸ்மார்ட் சாவி, ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ரியர் வியூ கேமரா, 8 ஸ்பீக்கர்கள், வாய்ஸ் கமாண்ட் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கியத் தகவல்கள்!

போட்டியாளர்கள்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் மற்றும் விரைவில் வரும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், இந்த மூன்று மாடல்களில் விலை குறைவான தேர்வாக அமையும். இந்த கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ACI

Most Read Articles

English summary
Here are some key details surfaced in online about upcoming Tata Nexon electric car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X