டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே களமிறங்கிவிட்டது. டாடா டிகோர் காரை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் டிகோர், நெக்ஸான் உள்ளிட்ட கார்களின் எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

அந்த வகையில், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரபலமான நெக்ஸான் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வரும் டிசம்பர் 17ந் தேதி அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ஸிப்ட்ரான் என்ற மின்சார காருக்கான தொழில்நுட்ப தொகுப்புடன் வர இருக்கும் முதல் கார் மாடலாக நெக்ஸான் இவி வர இருக்கிறது. அதாவது, தனது மின்சார கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி, மின் மோட்டார், இதற்கான பிரத்யேக சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் அடங்கிய தொகுப்பை ஸிப்ட்ரான் என்று டாடா குறிப்பிடுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

சிறந்த செயல்திறன், பேட்டரியிலிருந்து மின் ஆற்றல் இழப்பை தவிர்த்தல், மின் ஆற்றலை செம்மையாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் மூலமாக செம்மைப்படுத்தப்படும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த காரில் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை மிக உயரிய நீர் தடுப்பு உறை அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

டாடா நெக்ஸான் மின்சார காரில் பயன்படுத்தப்பட இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த காரின் பேட்டரி மற்றும் மின் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், நிச்சயம் கூடுதல் மதிப்பை பெறும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.17 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார். எனவே, ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் வரும் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட குறைவான விலை தேர்வாக அமையும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு

வரும் ஜனவரி- மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இதற்கு போட்டியாக எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்க மஹிந்திரா ஆயத்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2019, 11:13 [IST]
English summary
Tata Motors will unviel of its first electric SUV based on the Nexon in India on December 17, 2019
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+