இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா? புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான சுமோ, பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் காராக உரு மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான டாடா சுமோ, பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஜி 350 டி மாடலின் உருவத்தை டாடா சுமோ பெற்றிருக்கின்றது. ஆனால், இவ்விரண்டிற்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக டாடா நிறுவனத்தின் சுமோ கார்கள் இருக்கின்றன. இதில் பயணிக்காத நபர்கள் இருக்கவே முடியாது என்று கூறிவிடலாம். ஏனென்றால், அந்தளவிற்கு இந்த கார்கள் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

ஏன், இந்தியாவின் பல காவல்துறை இந்த கார்களைதான் பயன்படுத்தி வருகின்றன. அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த கார்களில் ஒன்றாக இவை திகழ்கின்றன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் இந்த சிறப்பு வாய்ந்த டாடா சுமோ காரை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் காராக மாற்றி வடிவமைத்துள்ளார்.

இந்த சுமோ, 2002ம் ஆண்டிற்கான மாடல் என கூறப்படுகின்றது. இதனை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் காருக்கு இணையாக உருமாற்ற அவர் ரூ. 5 லட்சம் வரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

மேலும், சுமோவிற்கு இந்த புதிய அவதாரத்தை கொடுக்க சுமார் 6 மாதங்கள் வரை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில், சுமோவினை பென்ஸ் ஜி கிளாஸ் காராக தோன்றும் வகையில், புதிய வட்ட வடிவ முகப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பம்பரும் முன்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் முகப்பு பகுதியில் உள்ள கிரில் அமைப்பு ஜி கிளாஸ் கார்களில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

இவ்வாறு, அனைத்து பாகங்களும் சுமோவின் உருவத்தை மாற்றி, முற்றிலுமாக பென்ஸ் ஜி கிளாஸைப் போன்று காட்சியளிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மேற்கூறியவை மட்டுமின்றி புதிய அவதாரம் பெற்றுள்ள சுமோவில் கூடுதலாக பல்வேறு சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

அந்தவகையில், சுமோவின் மேற்கூறையில் எல்இடி மின் விளக்கு காணப்படுகின்றது. இத்துடன், ஆஃப்-ரோடு பயணத்திற்கேற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் பின்பக்க டிசைனும் ஜி-வேகன் காரைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப, சிறிய ஜன்னல், குட்டியான மின் விளக்கு ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

இத்துடன், கூடுதலாக பவர் ஸ்டியரிங், ஏசி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சொகுசு மற்றும் பிரிமியம் வசதிகளுக்காக லெதர் போர்வையாலான இருக்கை உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

இது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா..? இந்த புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வது குற்றமாகும். மேலும், இந்த வாகனத்தில் காணப்படும் ஒரு சில பாகங்கள் சட்டத்திற்கு புறம்பானவையாக காட்சியளிக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

கார்களின் டிசைனை மாற்றுவது சிலருக்கு பிடித்தமான விஷயம். அதேபோல, கார்களின் உட்புறத்தையும், சொகுசு வசதிகளையும் வேற லெவலுக்கு மாற்றி பயன்படுத்துவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக மஹிந்திரா மராஸ்ஸோவின் உட்புறத்தை சொகுசு கார் போல டிசி நிறுவனம் மாற்றி காட்டி அசத்தியுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

எம்பிவி, எஸ்யூவி ரக கார்களை மிக சொகுசாக மாற்றி வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ 7 சீட்டர் காருக்கும் கஸ்டமைஸ் பேக்கேஜை வழங்குகிறது டிசி நிறுவனம்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

டேஷ்போர்டில் அலங்கார மரத்தகடுகள் மற்றும் க்ரோம் ஆக்சஸெரீகளுடன் மிக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலும் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கதவுகளிலும் லெதர் மற்றும் அலங்கார மரத்தகடுகளுடன் பிரிமீயம் கார் போல காட்சியளிக்கிறது. அதற்கு தக்கவாறு விசேஷ விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

டிசி கஸ்டமைஸ் பேக்கேஜில் முக்கிய அம்சமாக மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. நடுவரிசையிலும், பின் வரிசையிலும் தலா இரண்டு பெரிய இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நடுவரிசை இருக்கைகளை போதுமான அளவு சாய்த்துக் கொள்ள முடியும்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

இரண்டு இருக்கைகளுக்கும் நடுவில் இடம்பெற்றிருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்ரெஸ்ட் முன்புறத்திலேயே டிவி திரைகளை கட்டுப்படுத்தும் தொடு உணர் பட்டன்கள் கொண்ட திரை இடம்பெற்றுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

மிக வசதியான ஹெட்ரெஸ் அமைப்பும் சிறப்பாக உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளும் மிக சொகுசாக இருக்கிறது. இந்த இருக்கைகளும் அலுப்பில்லாத பயணத்தை வழங்கும். ஆனால், நடுவரிசையில் உள்ள இருக்கைகள் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் வணிகர்கள் மற்றும் அதிகாரிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

மிக சொகுசான இருக்கைகள் தவிர்த்து ஆன்ட்ராய்டு டிவி, ஐ-பேட் மற்றும் ஐ-பாட் வைப்பதற்கான இடவசதி, 12 வோல்ட் சார்ஜர், 7 லிட்டர் கொள்திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர்த்து, எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எமெர்ஜென்சி அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

டிசி டிசைன் கஸ்டமைஸ் பேக்கேஜ் உள்புறத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், இது மஹிந்திரா மூலமாகவே நேரடியாகவே வழங்கப்படுவதுதான்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

பொதுவாக, டிசி நிறுவனத்தை நேரடியாக அணுகும் விதத்திலேயே, இந்த கஸ்டமைஸ் பணிகள் செய்து தரப்படுகிறது. ஆனால், மராஸ்ஸோ காருக்காக டிசி டிசைன் நிறுவனத்துடன் மஹிந்திரா நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, மஹிந்திரா டீலர் மூலமாகவே கஸ்டமைஸ் பேக்கேஜை முன்பதிவு செய்து வாங்க முடியும்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

மஹிந்திரா மராஸ்ஸோ கார் போன்றே, இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி கார் மாடலாக விளங்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜை வழங்குகிறது டிசி நிறுவனம். அதனைத்தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லாஞ்ச் அல்டிமேட் என்ற பெயரில் இந்த புதிய பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெளிப்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் தனித்துவம் இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, டிசி டிசைன் லோகோ பொருத்தப்பட்ட க்ரில், சைடு போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

உட்புறத்தில்தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகள் நீக்கப்பட்டு, இரண்டு சொகுசான புஷ் பேக் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தாராள இடவசதியுடன், உயர் தர லெதர் கவர் செய்யப்பட்டிருப்பதால், மிக சொகுசான பயண அனுபவத்தை இந்த இருக்கைகள் தரும்.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

முன் வரிசை தனியாக பிரிக்கப்பட்டு நடுவில் தடுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், அந்த தடுப்பில் பின்புற பயணிகளின் வசதிக்காக பெரிய அளவிலான டிவி திரை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

சிறிய குளிர்சாதனப் பெட்டி, மடக்கி விரிக்கும் வசதி கொண்ட டேபிள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கதவுகள், தடுப்பு மற்றும் தரைப்பகுதியில் மர தகடுகள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

சூரிய வெளிச்சத்தை உள்ளே வர விடாமல் தடுப்பதற்கான தானியங்கி முறையில் செயல்படும் திரை மறைப்பு வசதியும் உண்டு. தடுப்பில் பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோவை வேற லெவலுக்கு மாற்றிய டிசி!

இருக்கைகளில் இருக்கும் தொடு உணர் பட்டன்கள் மூலமாக பொழுதுபோக்கு சாதனங்கள், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கஸ்டமைஸ் பேக்கேஜுக்கான விலை குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த கஸ்டமைஸ் வசதியை டிசி நிறுவனம் செய்து தரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Tata Sumo Modifications Make It Look Like Mercedes Benz G Wagen. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X