புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புல்லட் புரூஃப் முற்றிலும் புதிய கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வித்தியாசமான டிசைனில் வந்துள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

டிசைன், சொகுசு, தொழில்நுட்பம் என அனைத்திலும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. செயல்திறன்மிக்க சொகுசு கார் வாங்க பிரியப்படுவோர் கூட மின்சார கார்களுக்கு மாற்றிய பெருமை டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

டெஸ்லா கார்களின் அழகிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் தனது முதல் பிக்கப் டிரக் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. சைபர்டிரக் என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் வந்துள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் வகையில் இந்த பிக்கப் டிரக்கை அதிக நெளிவு சுளிவுகள் இல்லாமல் எளிமையாகவும், கூர்மையாகவும் வினோதமாக வடிவமைத்துள்ளது டெஸ்லா கார் நிறுவனம். அதேநேரத்தில், பயணிகளுக்கு அதிக பாதுகாப்பையும், இடவசதியையும் இந்த பிக்கப் டிரக் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

சினிமாக்களில் காட்டப்படுவது போலவே, விசேஷ வாகனம் போல இது காட்சியளிக்கிறது. இந்த பிக்கப் டிரக்கில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டமைப்பு, எளிதில் பாதிக்கப்படாத வகையிலான விசேஷ ஜன்னல் கண்ணாடிகள், துருப்பிடிக்காத விசேஷ பாகங்கள் உள்ளிட்டவற்றுடன் குண்டுதுளைக்காத வசதி கொண்ட மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

இந்த பிக்கப் டிரக்கில் எடைக்கு தக்கவாறு தானியங்கி முறையில் தரை இடைவெளியை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் உள்ளது. மிரட்டலான சக்கரங்கள், டயர்கள், அதிக தரை இடைவெளி என முற்றிலும் வித்தியாசமான தேர்வாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

இந்த காரில் 3+3 என்ற வகையில் 6 பேர் வரை செல்வதற்கான இருக்கை வசதி உள்ளது. இரண்டாவது வரிசை இருக்கையின் கீழ்பகுதியிலும் பொருட்களை வைப்பதற்கான இடவசதி அளிக்கப்படுகிறது. இந்த காரில் 17 அங்குலத்திலான பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

முதல்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ள புதிய டெஸ்லா சைபர்டிரக் மூன்று மாடல்களில் கிடைக்கும். விலை குறைவான மாடலானது ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 402 கிமீ தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரியுடன் வந்துள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

இரண்டாவது மாடலில் 482 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரியுடன் கிடைக்கும். இதில் இரண்டு மின் மோட்டார்கள் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடலில் மூன்று மின் மோட்டார்கள் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்ந்த மாடலில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

விலை குறைவான சிங்கிள் மோட்டார் மாடலுக்கு 39,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) விலையும், இரண்டு மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 49,900 டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.36 லட்சம்) விலையும், மூன்று மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 69,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்) விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் வசதியுடன் டெஸ்லா எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்!

எனினும், மூன்று மோட்டார்கள் கொண்ட டாப் வேரியண்ட்டானது வரும் 2022ம் ஆண்டுதான் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது. அதன்பிறகுதான் டெலிவிரி கொடுக்கப்படும். அனைத்து வேரியண்ட்டுகளும் 3,400 கிலோ வரை பாரம் ஏற்றும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
The much awaited Tesla electric Cybertruck has unveiled in USA. It will have a maximum range of 800 kilometers in single charge.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X