புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

தானியங்கி கார்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனம் தனது புத்தம் புதிய மாடல்ஒய் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் எலக்ட்ரிக் ரக கார்களை தயாரித்து வருகின்றது. ஆட்டோமொபைல்ஸ் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் வளர்ந்த நாடுகளில் பெருமளவில் விற்பனையைக் குவித்து வருகின்றது.

அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் தொழில்நுட்பத்திலும் சரி, பயணிகளின் பாதுகாப்பிலும் சிறந்த தயாரிப்பாக விளங்குகிறது. இதை நிரூபிக்கும்விதமாக, டெஸ்லா மாடல்3 கார் விபத்தின்போது லாபமாக செயல்படும் விபத்து காட்சிகள் சமீபத்தில் டிரெண்டானது. அந்த காட்சியில், "சிக்னலுக்காக காத்திருந்த டெஸ்லா, சமிக்ஞை கிடைத்த உடன் புறப்பட தயாராகிறது. அப்போது வலதுபுறத்தில் இருந்த அதிவேகமாக வந்த செவர்லே கார், டெஸ்லா மீது மோதவிருந்தது. ஆனால், டெஸ்லாவின் ஆட்டோமேடிக் பிரேக்கிங் சிஸ்டம் உடனடியாக கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்டு விபத்திலிருந்து தன்னையும், தன் உரிமையாளரையும் காப்பாற்றியது.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

இதுபோன்று, அதிநவீன சக்தி கொண்ட டெஸ்லாவின் தயாரிப்புகள் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இந்திய சாலை விதிமுறை இந்த கார்களின் இறக்குமதிக்கு ஓர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், டெஸ்லா நிறுவனம் தனது தயாரிப்புகளை மிக விரைவிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யும் தெரிவித்துள்ளது.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

இதைத்தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக சிலநேரங்களில் அதிரடி அறிவிப்புகளை வெளியிடும். அதன்படி, இந்த 2019ம் ஆண்டு தொடங்கிய இரு மாதங்களுக்கு உள்ளாகவே டெஸ்லா மாடல்3 யின் விலையைத் தொடர்ச்சியாக மூன்று முறை குறைத்து அறிவித்தது.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

இந்நிலையில், மாடல்3-யைக் காட்டிலும் பத்து மடங்கு பெரிய அளவிலான மாடல்ஒய் காரை டெஸ்லா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. எஸ்யூவி ரக காரான மாடல்ஒய்-இன் விலையானது மாடல்3-யைக் காட்டிலும் 10 பத்து மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அந்த நிறுவனத்தின் முதன்மை தலைவர் எலன்முஸ்க் இதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியாதவது, வருகின்ற 14ம் தேதி எல்ஏ டிசைன் ஸ்டுடியோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாடல்ஒய்-யை காட்சிப்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா: அதிர்ச்சியில் உறைந்த பிஎம்டபிள்யூ-ஆடி நிறுவனம்...

இதற்கான பணிகள் கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்காயின் ஜிகாபேக்டரியில் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றது. இங்கு வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Most Read Articles
English summary
Tesla Launches Model Y Car On March 14. Read In Tamil.
Story first published: Monday, March 4, 2019, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X