ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட் மற்றும் ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் அதிகம் 'கக்கா' போகும். அது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான காரணங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

புதிய கார்களை வாங்கும்போது பல விஷயங்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். உதாரணமாக ஒரு சிலர் சொகுசு வசதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். வேறு சிலர் பாதுகாப்பு வசதிகள் நிறைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இவை இரண்டுமே சரிசமமாக இருக்க வேண்டும் என்பதும் ஒரு சிலரின் விருப்பமாக உள்ளது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

ஆனால் புதிய கார்களை வாங்குபவர்கள் அதன் வண்ணத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? என்பது சந்தேகமே. சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கு இணையாக காரின் நிறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அது ஏன்? என்பதற்கான காரணங்களை இனி தெரிந்து கொள்ளலாம். இந்த காரணங்களை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

காரின் நிறத்திற்கும், விபத்திற்கும் இடையேயான தொடர்பு:

ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் மோனேஷ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், காரின் வண்ணத்திற்கும், சாலை விபத்துக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பிளாக், ப்ளூ, க்ரே, க்ரீன், ரெட் மற்றும் சில்வர் நிற கார்கள் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் எனவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

மற்ற வண்ண கார்களை காட்டிலும் மேற்கண்ட வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள கார்கள் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம். சரி, எந்த நிறம்தான் பாதுகாப்பானது என கேட்கிறீர்களா? வெள்ளைதான் பாதுகாப்பான ஆப்ஷன் என மோனேஷ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் உள்ளது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

பொதுவாக வெள்ளை நிற கார்கள் பார்வைக்கு எளிதாக புலப்படும். உதாரணத்திற்கு நீங்கள் வெள்ளை நிற கார்களை நெடுஞ்சாலைகளில் ஒரு ஓரமாக நிறுத்தியிருந்தாலும் கூட மற்ற வாகன ஓட்டிகளால் அதனை எளிதாக பார்க்க முடியும். எனவே வெள்ளை வண்ண கார்கள் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக ஏபிஎஸ், ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார்களை நீங்கள் பார்த்து பார்த்து வாங்கலாம். அதில் தவறில்லை. ஆனால் சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டுமென்றால், காரின் வண்ணத்திற்கும் நீங்கள் உரிய முக்கியத்துவத்தை கொடுத்தே ஆக வேண்டும்.

MOST READ: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

ரீசேல் வேல்யூ:

ஒரு சில ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக இருந்தால், நீங்கள் காரின் வண்ணத்திற்கு கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனெனில் அப்போதுதான் உங்கள் கார் நல்ல விலையை பெறும். இந்தியாவை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

MOST READ: பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா?

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்ந்தெடுத்த கார் வண்ணம் வெள்ளைதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 2018ம் ஆண்டு 43 சதவீத இந்திய வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களைதான் வாங்கியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிரே மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்கள் கடந்த ஆண்டு மிகவும் பிரபலமாக இருந்தன.

MOST READ: திடீரென குறுக்கே வந்த கார்: டிவைடரின் மீது மோதி 10 அடி உயரத்திற்கு பறந்த டொயோட்டா இன்னோவா... வீடியோ!

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

கிரே மற்றும் சில்வர் ஆகிய வண்ண கார்களை தலா 15 சதவீத வாடிக்கையாளர்கள் வாங்கியிருந்தனர். ரெட் கலர் கார்களை 9 சதவீத வாடிக்கையாளர்களும், ப்ளூ கலர் கார்களை 7 சதவீத வாடிக்கையாளர்களும் வாங்கியிருந்தனர். அதே சமயம் கருப்பு கலர் கார்களை வெறும் மூன்று சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும்தான் தேர்வு செய்திருந்தனர்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த வண்ணம் பிரபலமாக உள்ளது? என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சர்வதேச அளவிலும் கூட வெள்ளை நிறம் மிகவும் பிரபலமாகதான் உள்ளது. தூய்மையின் வெளிப்பாடாக வெள்ளை பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் நிறத்தின் மூலமாக தங்கள் மனதில் உள்ளதை பேச நினைக்கின்றனர்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

நிறத்தின் மூலமாக தங்களை நிலைநிறுத்தி கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணமாகதான் தூய்மையின் வெளிப்படான வெள்ளை நிறம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதே நேரத்தில் வேறு சில காரணங்களுக்காக வெள்ளை நிறத்தை தவிர்ப்பவர்களும் கூட இருக்கின்றனர். வெள்ளை நிறம் அழுக்கை எளிதாக காட்டி விடும்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

தூய்மையின் நிறமான வெள்ளை அழுக்கை எளிதாக காட்டுவது என்பது ஒரு முரண்பாடான உண்மை. ஆனால் இந்த காரணத்திற்காக வெள்ளை நிறத்தை தவிர்ப்பவர்களும் உள்ளனர். எனவே புதிய காரை வாங்கும்போது பராமரிப்பதற்கு ஏதுவான நிறத்தை தேர்வு செய்வதும் அவசியமானது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

காக்கா 'கக்கா' போகும் கலர்கள் எவை தெரியுமா?

நீங்கள் உங்கள் கார்களை பொக்கிஷம் போல பொத்தி பொத்தி பாதுகாக்கலாம். ஆனால் உங்கள் கார்களை பறவைகள் டாய்லெட்டாகதான் பயன்படுத்தும். உங்கள் காரை சாலையோராமாக பார்க்கிங் செய்து விட்டு மளிகை கடைக்கு சென்று வந்திருப்பீர்கள். அப்போது விண்டுஷீல்டு மீதோ அல்லது ரூஃப் மீதோ பறவைகள் தங்கள் கழிவுகளை வெளியேற்றியிருக்கும்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

பறவைகளின் கழிவுகள் காரின் பெயிண்ட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சில மேற்பரப்புகளின் மீதும் இதனால் பாதிப்பு உண்டாகும். இதற்கு என்ன செய்ய முடியும்? என நீங்கள் கேட்பது புரிகிறது. சாலை விபத்துக்களுக்கும், காரின் வண்ணத்திற்கும் எப்படி தொடர்பு உள்ளதோ? அதேபோல் காரின் வண்ணத்திற்கும், பறவைகள் 'கக்கா' போவதற்கும் கூட தொடர்பு உள்ளது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

ரெட், ப்ளூ மற்றும் பிளாக் கலர் கார்களின் மீதுதான் பறவைகள் தங்கள் கழிவுகளை அதிகம் வெளியேற்றும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் வெள்ளை, க்ரே, சில்வர் மற்றும் க்ரீன் நிற கார்களின் மீது பறவைகள் 'கக்கா' போகும் வாய்ப்புகள் குறைவு. ஆங்கிலம் பேசும் 5 நகரங்களில், 1,000 கார்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இது கண்டறியப்பட்டது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

குறிப்பிட்ட வண்ண கார்களின் மீதும் மட்டும் தங்கள் கழிவுகளை பறவைகள் அதிகம் வெளியேற்றுவது ஏன்? என்பதற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. என்றாலும் கூட பல்வேறு காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். உதாரணத்திற்கு சிகப்பு நிறத்தை எடுத்து கொள்ளலாம். சிகப்பு வண்ணத்தை தங்களுக்கு ஆபத்தான வண்ணமாக பறவைகள் உணர்வதாக கூறப்படுகிறது.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

எனவே சிகப்பு நிற கார்களை 'அட்டாக்' செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு பறவைகள் வருகின்றன. இதற்கு தங்களது 'பின்' பகுதியை அவை பயன்படுத்தி கொள்கின்றன. மேலும் ப்ளூ மற்றும் ரெட் ஆகிய நிறங்களில், பறவைகள் தங்கள் பிரபதிபலிப்புகளை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா?

ஆனால் பறவைகள் இதனை தங்களுக்கு அச்சுறுத்தலாகதான் பார்க்கும். இதன் விளைவாக ப்ளூ மற்றும் ரெட் வண்ண கார்களின் மீது தங்கள் 'பின்' பகுதி பலத்தை பறவைகள் காண்பித்து விடுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ப்ளூ மற்றும் ரெட் வண்ணங்களில் கார் வாங்க நீங்கள் முடிவு எடுத்திருந்தால், எதற்கும் அந்த முடிவை ஒரு முறை மறுபரிசீலனை செய்யுங்கள்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

கார் கலரில் பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. மற்றொரு விஷயத்தையும் தொடர்ந்து பார்க்கலாம்.அதாவது, கார் கலருக்கும், விபத்து ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

கார் வாங்கும்போது ஏர்பேக் இருக்கிறதா, ஏபிஎஸ் பிரேக் இருக்கிறதா என்று பாதுகாப்பு அம்சங்களை பார்த்து பார்த்து பலர் வாங்குகின்றனர். இவையெல்லாம் மிக முக்கிய பாதுகாப்பு விஷயங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், விபத்தை தவிர்ப்பதற்கு அடிப்படையான ஆயுதம் என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை. காரின் வண்ணம்தான் அது. விபத்துக்கும், காரின் வண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்பது நியாயம்தான். ஆனால், நிச்சயம் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆம், வெளிர் நிற கார்களைவிட அடர் வண்ண கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அடர் வண்ண கார்கள் எளிதில் புலப்படாததுதான் காரணம்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

குறிப்பாக, இரவு நேரங்களில் ஹெட்லைட் ஒளியில் அடர் வண்ண கார்களைவிட வெள்ளை வண்ணக் கார்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். இரவு நேரங்களில் கருப்பு, நீலம், சாம்பல் வண்ண கார்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபணமாகியிருக்கிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு தொடர்பான ஆய்வுகளில் வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிற கார்களைவிட கருப்பு, நீலம், சாம்பல் உள்ளிட்ட வண்ணக் கார்கள் அதிகம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தின் கார் விபத்து புள்ளிவிபரங்களை எடுத்து அந்நாட்டை சேர்ந்த மோனாஷ் பல்கலைகழகத்தின் விபத்து ஆராய்ச்சி மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது, வெள்ளை நிற கார்களுடன், இதர வண்ணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அப்போது, கருப்பு, நீலம், சாம்பல், பச்சை, சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ண கார்கள் வெள்ளை வண்ணக் கார்களைவிட அதிகம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது தெரிய வந்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அதாவது, சிறந்தது வெள்ளை நிறம் மட்டுமே என்ற கருத்தை தெரிவித்தனர். வெள்ளையுடன் ஒப்பிடும்போது சில்வர் வண்ணக் கார்கள் 50 சதவீதம் அளவுக்கு விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக மற்றொரு பொது கூற்றையும் உடைத்துள்ளனர்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வெள்ளை நிற கார்களை நிறுத்தியிருந்தாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தூரத்திலிருந்தே கார் நிற்பது புலனாகும். வெள்ளை நிற கார்களில் மற்றொரு பயனும் இருக்கிறது. சென்னை போன்ற படு ஹாட்டான தட்பவெப்ப நிலை கொண்ட ஊர்களுக்கு வெள்ளை வண்ணக் கார்கள் சிறந்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஏனெனில், சூரிய ஒளியை வெள்ளை வண்ணம் பிரதிபலிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஏசியிலிருந்து வரும் குளிர்ச்சி சிறப்பாக இருக்கும். காருக்கள் அதிக வெப்பம் கடத்தப்படாது. ஏன் இரவு நேரங்களில் தெருவில் நிறுத்தியிருந்தால்கூட, நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

வெள்ளை நிற கார்களை பலர் தவிர்ப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அதனை பராமரிப்பது சற்று சிரமம் என்பதாகத்தான் இருக்கும். மேலும், சாம்பல் வண்ண கார்கள் சற்று பிரிமியமாக தோற்றமளிப்பதும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்ய தூண்டுகிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆனால், இதில் இருக்கும் அடிப்படை பாதுகாப்பு விஷயத்தை புரிந்து கொண்டால் பிரச்னை இருக்காது. பயணங்களும் மகிழ்ச்சியாக அமையும். பாதுகாப்பு கருதி மாருதி உள்ளிட்ட சில நிறுவனங்கள் கருப்பு வண்ணக் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 3 Reasons To Spend More Time Choosing Your New Car’s Colour. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X