முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ காரை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய இருப்பது குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்த சூழலில், முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் கிளான்ஸா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வர இருக்கிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் மாருதி பலேனோ கார் டொயோட்டா க்ளான்ஸா காராக மாறி இருக்கிறது. மாருதி பலேனோ காரின் முன்புற க்ரில் அமை்பில் இரண்டு க்ரோம் பட்டைகள் சேர்க்கப்பட்டு டொயோட்டா இலட்சினை பொருத்தப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

அதேபோன்று, பின்புறத்திலும் டொயோட்டாவின் லோகோ நடுவில் பூட்லிட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருபுறத்திலும் க்ளான்ஸா மற்றும் வேரியண்ட் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. பொதுவாக ரீபேட்ஜ் மாடல்களில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களின் டிசைன் மாறுதல் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இதில் மாறுதல் எதுவும் இல்லை.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

மாருதி பலேனோ கார் பெட்ரோல் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், டொயோட்டா க்ளான்ஸா காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது. மாருதி பலேனோ காரின் ஒமேகா, டெல்ட்டா ஆகிய பேஸ் வேரியண்ட்டுகள் தவிர்க்கப்பட இருக்கின்றன.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

மாருதி பலேனோ காரின் நடுத்தர விலை கொண்ட ஸீட்டா வேரியண்ட்டானது டொயோட்டா க்ளான்ஸா காரில் ஜி என்ற வேரியண்ட் பெயரிலும், ஆல்ஃபா வேரியண்ட்டானது வி என்ற வேரியண்ட் பெயரிலும் வர இருக்கிறது. ஸ்பை படங்களில் விலை உயர்ந்த வி வேரியண்ட்தான் காட்சி தருகிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

புதிய டொயோட்டா க்ளான்ஸா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறுவதும் உறுதியாகி இருக்கிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணியில் வெளிவரும் முதல் ரீபேட்ஜ் கார் மாடலாக டொயோட்டா க்ளான்ஸா வர இருக்கிறது. முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி ஆலையில் டொயோட்டா க்ளான்ஸா கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

பின்னர் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலைக்கு க்ளான்ஸா கார் உற்பத்தி மாற்றம் செய்யப்பட இருக்கிறது. மாருதி பலேனோ காரை தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் உள்ளிட்ட கார்களும் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முதல்முறையாக டொயோட்டா க்ளான்ஸா காரின் தரிசனம்!

டொயோட்டா க்ளான்ஸா கார் மாடலானது ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு மட்டுமின்றி, மாருதி பலேனோ காருக்கும் போட்டியாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால், மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவை மிகப்பெரிய பலம். அதனை முறியடுத்து, டொயோட்டா க்ளான்ஸா கார் வெற்றி பெறுவது மிக சவாலான விஷயமாகவே இருக்கும். ஆனால், ஓரளவு கூடுதல் விற்பனையை பெறும் நோக்கில் இந்த ரீபேட்ஜ் வர்த்தக யுக்தி பயன்படுத்தப்பட இருக்கிறது.

Source: ACI

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza, a rebadged version of the Maruti Baleno is expected to launch in the Indian market sometime in the first week of June 2019. Ahead of its launch, images of the Toyota Glanza has been leaked online for the first time.
Story first published: Tuesday, April 30, 2019, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X