நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பு தகவல்!

டொயோட்டா-சுஸுகி ஆகிய நிறுவனங்களின் இணைப்பிற்கு வரும் முதல் காரான க்ளான்ஸாவை, அதன் டீலர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அவ்வாறு டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டபோது, காரின் சிறப்பம்சம் குறித்த வீடியோவை வாலட் வீடியோஸ் என்ற இணையதளம் காட்சிப்படுத்தி யுடியூபில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

டொயோட்டா-சுஸுகி ஆகிய நிறுவனங்களின் இணைப்பிற்கு பின்னர், விற்பனைக்கு வரும் முதல் மாடலாக க்ளான்ஸா இருக்கின்றது. முன்னதாக இந்த கார் சுஸுகி பேட்ஜில் பலேனோ என்ற பெயரில் விற்பனையாகி வந்தது. தொடர்ந்து, இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து, இந்த கார் தற்போது டொயோட்டா பேட்ஜில் க்ளான்ஸா என்ற பெயரில் களமிறக்கப்பட்டு உள்ளது.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

இந்த புதிய கார் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அண்மைக் காலங்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேபோன்று, அண்மையில் இந்த கார் விற்பனைக்காக அதன் டீலர்களை வந்தடைந்திருப்பதாகவும் வீடியோ ஒன்று வெளியாகியது.

இந்நிலையில், ஷோரூமிற்கு வந்த க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பினை அதன் டீலர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அவ்வாறு, புதிய க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், க்ளான்ஸா காரில் சிவிடி ஆப்ஷன் இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்தியாஆட்டோஸ்பிளாக் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

புதிய க்ளான்ஸா கார் பெரிய அளவிலான மாற்றங்களைப் பெறாமல், பழைய பலேனோவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று வித்தியாசமாக காட்சியளிப்பதைப் போன்று வடிவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், காரின் ரேடியேட்டர் க்ரில் அமைப்பு உள்ளிட்டவை, சிறு சிறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. க்ரில்லானது, இரண்டு குரோம் பூச்சுக் கொண்ட விங் அமைப்பைப் பெற்றுள்ளது. அதேபோன்று, காரின் உட்புறமும் பெயரளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே ஹேட்ச்பேக் ரகத்திலான ஸ்போர்ட்ஸ் காரை ஜப்பானில் தயாரித்து வருவகிறது. சுஸுகி நிறுவனத்தின்கீழ், இந்த கார் தயாரிக்கப்பட்ட காலத்தில் அதன் குஜராத் பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, இரு நிறுவனங்களின் இணைப்பைத்தொடர்ந்து, இந்த புதிய ஹேட்ச்பேக் ரக க்ளான்ஸா கார், பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட உள்ளன.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

டொயோவின் பேட்ஜில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய க்ளான்ஸா கார், வருகின்ற ஜீன் மாதம் 6ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ வாரண்டியினை டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கின்றது. இது மாருதி பலனோவைக் காட்டிலும் அதிகமாகும். இதேபோன்று, 5 வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை ஆப்ஷனலாகவும் வாரண்டி வழங்கப்பட உள்ளன.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸாவானது, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வேரியண்ட்களில் மட்டுமே தயாராகியுள்ளன. இதில் க்ளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து வண்ண தேர்வில் புதிய க்ளான்ஸா கிடைக்க இருக்கின்றன. மேலும், இந்த காரில் பிஎஸ்-6 தரத்திலான, 1.2 லிட்டர் கே12எம் விவிடி என்/ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82.94 பவரையும் (61 kW), 113 என்எம் டார்க்கையும் வெளப்படுத்தும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது. இத்துடன், 5 ஸ்பீடு எம்டி அல்லது 19.56 கிமீ/லி சிவிடி ஆகிய ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கின்றது.

நீண்ட காத்திருப்பிற்கு பின் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட டொயோட்டா-சுஸுகியின் முதல் கார்: சிறப்பம்சம் குறித்த விபரம்!

முதல் கட்டமாக 364 க்ளான்ஸா கார்கள் டிஸ்பேட்ச் செய்யப்பட்டுள்ளன. இவை ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவிற்காகவும், காட்சிப்படுத்தவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த க்ளான்ஸா கார் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரவிருப்பதால், பலேனோவைக் காட்டிலும் கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza Seen Being Driven For The First Time, CVT Confirmed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X