டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனம் முழுமையாக ஏற்க இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா நிறுவனமும் கூட்டணி அமைத்து செயல்பட இருப்பது தெரிந்ததே. முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் வர இருக்கிறது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

அண்மையில் டெயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி குஜராத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் துவங்கியதுடன், டீலர்களுக்கு அனுப்பும் பணியும் துவங்கிவிட்டது. எனினும், டொயோட்டா க்ளான்ஸா காரின் உற்பத்தி விரைவில் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலைக்கு மாற்றப்பட இருக்கிறது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

இந்த நிலையில், அடுத்ததாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனமே முழுமையாக ஏற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

அதாவது, மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு பிராண்டுகளுக்கான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகளும் பெங்களூர் டொயோட்டா கார் ஆலையிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கார்அண்ட்பைக் தள செய்தி தெரிவிக்கிறது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

டொயோட்டா கார் ஆலையானது ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், தற்போது உற்பத்தி திறனைவிட மிக குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, இந்த ஆலையின் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

டொயோட்டா நிறுவனத்தின் கார் ஆலையின் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, மாருதியின் சில கார்களின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா ஆலைக்கு மாறும் மாருதி பிரெஸ்ஸா உற்பத்தி!

மேலும், டொயோட்டா ஆலையின் உற்பத்தி திறனையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதுடன் கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால், இரு நிறுவனங்களுக்கும் வர்த்தக ரீதியில் அதிக பயன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Source: Carandbike

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Maruti Suzuki has officially announced that the Vitara Brezza compact SUV will be assembled at Toyota Kirloskar Motors' plant in Bidadi, near Bangalore. It was a known fact that the Maruti Suzuki Vitara Brezza was among the cars listed for Toyota to share with Maruti Suzuki as part of their agreement.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X