இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

டொயோட்டா நிறுவனம் 2 பிரம்மாண்ட புதிய கார்களை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இவற்றின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஏராளமான பிரீமியம் கார்களை விற்பனை செய்து வருகிறது. முழுக்க முழுக்க பிரீமியம் செக்மெண்ட் மீதே கவனம் செலுத்துவதால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான டொயோட்டா கார்களின் விலை 15 லட்ச ரூபாய்க்கும் மேல்தான் உள்ளது.

ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நம்மவர்கள் பட்ஜெட் விலையில்தான் காரை எதிர்பார்ப்பார்கள். அப்படி இருந்தும் கூட, இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி கொண்டுள்ளது.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விலை அதிகம் என்ற போதிலும், டொயோட்டா நிறுவன கார்களின் விற்பனை அமோகமாகவே உள்ளது. 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட செக்மெண்ட்டில், டொயோட்டாவை போல் வேறு எந்த நிறுவனத்தாலும் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்ய முடியாது.

இதன்மூலம் இந்தியாவில் மிகவும் லாபகரமாக இயங்க கூடிய கார் நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா திகழ்கிறது. இதற்கு டொயோட்டா நிறுவனம் தங்களது புகழ்பெற்ற மாடல்களான இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர், கோரெல்லா அல்டிஸ், கேம்ரி ஹைபிரிட் ஆகிய கார்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த சூழலில் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், போட்டி நிறுவனங்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்திய மார்க்கெட்டில் இரண்டு புதிய கார்களை களமிறக்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒன்று எஸ்யூவி வகையை சேர்ந்ததாகவும் (5 சீட்டர்), மற்றொன்று எம்பிவி வகையை சேர்ந்ததாகவும் (7 சீட்டர்) இருக்கும்.

சர்வதேச மார்க்கெட்களில் ரஷ் எஸ்யூவி (Rush SUV) மற்றும் அவென்சா எம்பிவி (Avanza MPV) ஆகிய கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவற்றை அடிப்படையாக கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவ்விரு கார்களையும் டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டிலும் லான்ச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே நிலவி வருகிறது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் டொயோட்டா களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதில், எஸ்யூவி ரக காரான ரஷ், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான சவாலை அளிக்கும். அதே நேரத்தில் எம்பிவி ரக காரான அவென்சா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

ரஷ், அவென்சா ஆகிய கார்களின் விலை பார்ச்சூனருக்கு கீழாக நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்தியாவில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் ரூ.27.58 லட்சம் முதல் ரூ.33.28 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் ரஷ் மற்றும் அவென்சா ஆகிய கார்களின் விலை இதை விட மிகவும் குறைவாக இருக்கும். அதாவது இவற்றின் விலை ரூ.15-20 லட்ச ரூபாய்க்குள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா என்ற பிராண்டிற்கு இது நியாயமான விலையாகவே கருதப்படுகிறது.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

டொயோட்டா கார்கள் கொடுக்கும் பணத்திற்கு 'வொர்த்' ஆக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமே இல்லை. டொயோட்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் இன்னோவா கிரிஸ்டா காரின் விலை கூட ரூ.14.83 லட்சம் முதல் ரூ.23.24 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதன் விலையை காட்டிலும், ரஷ் மற்றும் அவென்சா கார்கள் குறைவான விலையில்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், சாதாரண சிறிய கார்களின் மீது மட்டுமே இருந்து வந்த இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் தற்போது சொகுசான பெரிய கார்களின் மீதும் திரும்பியுள்ளது.

விலையை கொஞ்சம் கூடுதலாக கொடுக்கவும் நம்மவர்கள் தயாராகி விட்டனர். எனவே சமீப காலமாக இந்தியாவில் எஸ்யூவி, எம்பிவி கார்களுக்கான 'டிமாண்ட்' அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் களம் இறங்கவுள்ள ரஷ், அவென்சா கார்கள் இந்திய மார்க்கெட்டிற்கு பொருத்தமானதாக இருக்கும்.

இந்தியாவை கலக்க வருகிறது டொயோட்டாவின் 2 பிரம்மாண்ட கார்கள்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இவ்விரு கார்களையும் டொயோட்டா நிறுவனம் இன்னும் இரண்டு ஆண்டிற்குள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் தற்போதே வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் தோல்வியடைவது என்பது அபூர்வம். அப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லான்ச் ஆன டொயோட்டா யாரிஸ் படுதோல்வியை சந்தித்தது. செடான் வகையை சேர்ந்த யாரிஸ் ஃபெயிலியர் மாடலாகவே கருதப்படுகிறது.

இந்த தோல்வியில் இருந்து டொயோட்டா நிறுவனம் சில பாடங்களை கற்று கொண்டுள்ளது. எனவே ரஷ் எஸ்யூவி மற்றும் அவென்சா எம்பிவி கார்களை டொயோட்டா பிரம்மாண்டமாக களமிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Planning Rush, Avanza Based C-SUV & C-MPV For India At Rs.15-20 Lakh Range. Read in Tamil
Story first published: Friday, February 8, 2019, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X