டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் இந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு எம்பிவி கார் மாடல் வெல்ஃபயர். வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா அல்ஃபார்டு சொகுசு மினி வேனின் அடிப்படையிலான அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்தான் வெல்ஃபயர்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

கடந்த ஜூலை மாதம் நடந்த டொயோட்டா நிறுவனத்தின் டீலர்களுக்கான ஆண்டு கூட்டத்தில் இந்த புதிய கார் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன், டீலர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில், டீலர்கள் ஆர்வம் தெரிவித்ததையடுத்து, இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டத்தில் இறங்கியது டொயோட்டா.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

இந்த நிலையில், தற்போது டொயோட்டா வெல்ஃபயர் கார்கள் பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதமே இரண்டு வெல்ஃபயர் கார்களை டொயோட்டா நிறுவனம் டீலர்களுக்கு அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

எனவே, இந்த புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் மிக விரைவிலேயே இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் என்ற மிக உயரிய சொகுசு எம்பிவி காருக்கு இணையான அம்சங்களை பெற்றிருக்கிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் 4,935 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,935 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களின் அடிப்படையில் 160 மிமீ அல்லது 170 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

இந்த புதிய சொகுசு காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎஸ் பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 301 பிஎஸ் பவரையும், 361 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

மேலும், 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது ஹைப்ரிட் தேர்விலும் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த மாடலில் இருக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 152 என்எம் டார்க் திறனையும், 206 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டார் 142 பிஎஸ் பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த ஹைப்ரிட் மாடல்தான் வர இருப்பதாக தெரிகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் விளக்குகள், அலை அலையாய் ஒளிரும் அமைப்புடைய இன்டிகேட்டர் விளக்குகள், 7 ஏர்பேக்குகள், வென்டிலேட்டட் வசதியுடன் இருக்கைகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பின் இருக்கைகளுக்கான பொழுதுபோக்கு டிவி திரைகள், மர அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான சொகுசு வசதிகள் உள்ளன. மிக சொகுசான இருக்கைகளும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு போட்டியாக கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to media report, Toyota has started dealer despatch of Vellfire has commenced, which indicates an imminent launch.
Story first published: Monday, October 7, 2019, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X