பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அமலாக கிட்டத்தட்ட இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளது. இதனால் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான வாகனங்களை தயாரிக்கும் வேலையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மும்முரமாக இறங்கியுள்ளன.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

அந்தவகையில் டொயோட்டா நிறுவனம் தனது மிட்-சைஸ் செடான் மாடலான யாரிஸ்-ஐ பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் பணியை துவங்கியுள்ளது. ஆனால் இந்த மாடலில் கூடுதல் என்ஜின் தேர்வு எதுவும் கொண்டுவரப்படாமல் பெட்ரோல் வேரியண்ட் மட்டும் தான் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

தற்போதைய டொயோட்டா யாரிஸ் மாடலில் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 107 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதே ஆற்றல் அளவை தான் பிஎஸ்6 தரத்திலும் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

ஆனால் பிஎஸ்6 மாற்றத்தால் என்ஜினின் தரத்தை சிறந்ததாக எதிர்பார்க்கலாம். ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக்-ஆக தொடரவுள்ளது. யாரிஸ் செடான் மாடல் மேனுவல் கியர்பாக்ஸில் 17.1 கிமீ/நேரம் மைலேஜ்ஜையும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் 17.8 கிமீ/நே மைலேஜ்ஜையும் வழங்குகிறது. இந்த மைலேஜ் அளவுகள் பிஎஸ்6 அப்டேட்டால் மாற்றமடையவுள்ளன.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

இந்த பிஎஸ்6 அப்டேட்டிற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சில அப்டேட்களை டொயோட்டா யாரிஸ் செடான் கார் பெற்றிருந்தது. விலை அதிரடியாக குறைக்கப்பட்டு அறிமுகமான இந்த காரை பற்றிய தகவல்களை மேலும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

இந்த அப்டேட்கள் யாரிஸின் பிஎஸ்6 வெர்சனிலும் தொடரவுள்ளன. அதேபோல் இந்த பிஎஸ்6 கார் தற்போதைய யாரிஸ் மாடல் கொண்டுள்ள நான்கு ட்ரீம் நிலைகளை பெறவுள்ளது. இதில் ஆரம்ப நிலை ஜே வேரியண்ட் கார், ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, ரிமோட் லாக்கிங், பவர் கண்ணாடி பொருத்தப்பட்ட ஜன்னல்கள், பவர் அட்ஜெஸ்ட்டபிள் விங் மிரர்ஸ், பின்புற இருக்கைகளிலும் ஆர்ம் ரெஸ்ட், ஏழு காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங், பார்க்கிங் சென்சார்ஸ், சீட்பெல்ட் மற்றும் அதிக வேகத்தை நினைவூட்டும் வசதி போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

அடுத்த நிலை வேரியண்ட்டான ஜி கூடுதலாக, ஆட்டோமேட்டிக் ஏசி, ரூஃப் வரை பரவக்கூடிய ஏசியின் காற்று, சாவி இல்லாமலேயே காரில் நுழையும் மற்றும் வெளியேறும் வசதி, அதிகளவில் பவர் கொண்ட விங் மிரர்ஸ், பின்புற டீஃபாக்கர் மற்றும் முன்புறத்திலும் பின்புறத்திலும் ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

Most Read:பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

இதற்கு அடுத்து உள்ள வி வேரியண்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக், 7-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், முன்புற பார்க்கிங் சென்சார்ஸ், பின்புற பார்க்கிங் கேமிரா மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், எல்இடி டிஆர்எல்ஸ், லெதர் இருக்கைகள், பவர் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை, நீர் பட்டால் தானாக செயல்படும் வைபர்ஸ், பின்புற சன்ஷேட், பேடல் ஷிப்டர்ஸ் (சிவிடி ஆட்டோ மாடல்களில் மட்டும்), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன தொழிற்நுட்பங்களை டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடானின் ஹை-டாப் வேரியண்ட்டான விஎக்ஸ்-க்கு கொடுத்துள்ளது.

Most Read:இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானை பற்றிய தகவல்கள் வெளியானது...

தற்சமயம் யாரிஸ் பிஎஸ்4 செடான் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.76- 14.18 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த காரின் விலை ரூ.10,000- 15,000 வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட பின்னரும் இந்த கார் தனது பிரிவில் உள்ள மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
BS6-compliant Toyota Yaris 1.5 petrol to be launched soon
Story first published: Monday, December 23, 2019, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X