கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டொயோட்டா யாரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரம்ப விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்ட டொயோட்டா யாரிஸ் கார் விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களின் சந்தையை உடைக்க முடியாமல் தவித்து வருகிறது. டொயோட்டா யாரிஸ் காரின் டிசைன் இந்தியர்களை பெரிதாக கவரவில்லை. எனவே, கவர்ச்சிகரமான அம்சங்களுடன் யாரிஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது டொயோட்டா கார் நிறுவனம்.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

முக்கிய அம்சமாக, இரட்டை வண்ணத் தேர்வு வழங்கப்பட உள்ளது. அதாவது, கூரைக்கு தனி வர்ண பூச்சுடன் வந்துள்ளது. அதேபோன்று, புதிய டைமண்ட் கட் அலாய் வீல்களும், முன்புற மற்றும் பின்புற பம்பர்களுக்கு விசேஷ ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் க்ரில் அமைப்பிலும், சைடு மிரர்களிலும் விசேஷ கருப்பு பூச்சும் சிறப்பு சேர்க்கிறது.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் வர இருக்கிறது. புதிய லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் பின் இருக்கையிலும் சில மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

இந்த காரில் புதிய ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளைசப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கெச்சர் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

இதுதவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. புதிய டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டொயோட்டா யாரிஸ் கார் ஜே ஆப்ஷனல், ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

புதிய டொயாோட்டா யாரிஸ் கார் சிறப்பான பாதுகாப்பை அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

கூடுதல் அம்ங்களுடன் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்... விலை அதிரடி குறைப்பு!

புதிய டொயோட்டா யாரிஸ் காரின் ஜே ஆப்ஷனல் என்ற மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.8.65 லட்சத்திலும், சிவிடி மாடல் ரூ.9.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் வேரியண்ட் விலை ரூ.60,000 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இரட்டை வண்ணக் கலவை மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படும் வி ஆப்ஷனல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.11.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், சிவிடி மாடலுக்கு ரூ.13.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
The all-new Toyota Yaris face lift has recieveed mild upgrades that are aimed at making the car more upmarket. The new Yaris gets a dual-tone roof, and diamond-cut alloy wheels to make the vehicle more premium.
Story first published: Tuesday, September 3, 2019, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X