இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ரெனால்ட் கார் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

ரெனால்ட் நிறுவனத்தின் 7 சீட்டர் ட்ரைபர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. வெகு விரைவில் ட்ரைபர் காரை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கும் அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக வரும் பண்டிகை காலத்தில் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

இந்த சூழலில் ரெனால்ட் ட்ரைபர் காரின் டைமன்சன் மற்றும் கலர் ஆப்ஷன்கள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், எலெக்ட்ரிக் ப்ளூ, ஃபயரி ரெட் மற்றும் புதிய ஆரஞ்ச் என மொத்தம் 5 வண்ணங்களில் ரெனால்ட் ட்ரைபர் கார் கிடைக்கும். டைமன்சன் என எடுத்து கொண்டால், ரெனால்ட் ட்ரைபர் காரின் நீளம் 3990 மிமீ. அகலம் 1739 மிமீ. உயரம் 1643 மிமீ (ரூஃப் ரெயில்கள் அல்லாமல்). வீல் பேஸ் 2636 மிமீ.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

ரெனால்ட் ட்ரைபர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 182 மிமீ. கெர்ப் வெயிட் 947 கிலோ கிராம். ரெனால்ட் ட்ரைபர் கார் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வருகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் முதல் வரிசை ஷோல்டர் ரூம் 1356 மிமீ. இரண்டாவது வரிசை ஷோல்டர் ரூம் 1330 மிமீ. மூன்றாவது மற்றும் கடைசி வரிசையின் ஷோல்டர் ரூம் 1216 மிமீ. இந்த காரின் ஒவ்வொரு வரிசையிலும் ஏசி வெண்ட்கள் மற்றும் 12V பவர் சாக்கெட் வழங்கப்படவுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

மாற்றம் செய்யப்பட்ட சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ரெனால்ட் ட்ரைபர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் வேறு சில கார்களும் இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. ரெனால்ட் ட்ரைபர் காரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்படவுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படவுள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

ரெனால்ட் ட்ரைபர் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் ரெனால்ட் ட்ரைபர் கார் கிடைக்கும். வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

எனவே ரெனால்ட் ட்ரைபர் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ரெனால்ட் ட்ரைபர் கார் மீதான ஆவல் அதிகரிக்க அதன் விலைதான் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மிகவும் மலிவான விலையில் ரெனால்ட் ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 4 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை 7 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் இன்னும் ட்ரைபர் காரின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரெனால்ட் ட்ரைபர் காருக்கு நேரடி போட்டியாளர் என்று எந்த மாடலையும் குறிப்பிட முடியாது. இருந்தபோதும் மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட பி-செக்மெண்ட் ஹேட்ச்பேக் கார்களுடன் இது போட்டியிடும்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது

ரெனால்ட் நிறுவனம் தனது பிரபலமான மாடல்களான க்விட் மற்றும் டஸ்டர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது தவிர சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் தற்போது எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Triber Dimensions And Colour Schemes Revealed. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X