விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

கடந்த ஆண்டு வாகன விற்பனையில் உலகின் நம்பர்- 1 நிறுவனம் என்ற பெருமையை ஃபோக்ஸ்வேகன் குழுமம் தக்க வைத்துள்ளது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

வாகன விற்பனையில் உலகின் நம்பர்- 1 நிறுவனம் என்ற போட்டியில் டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் பின்தங்கிய நிலையில், அந்த இடத்தை ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டணி பிடித்துள்ளது

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

கடந்த 2016ம் ஆண்டு வாகன விற்பனையில் உலகின் முதல் இடத்தில் இருந்த டொயோட்டா கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் முதலிடத்தை பிடித்தது. அதுமுதல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, கடந்த ஆண்டிலும் முதல் இடத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் பெற்றுள்ளது.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

கடந்த 2017ம் ஆண்டு 10.76 மில்லியன் கார்களை விற்பனை செய்திருந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம், கடந்த ஆண்டு 10.83 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு 0.8 சதவீத வளர்ச்சியுடன் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் ஸ்கோடா, போர்ஷே, புகாட்டி, ஸ்கானியா, மேன் உள்ளிட்ட பல வாகன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

இரண்டாவது இடத்தை ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டணி பெற்றிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு 10.61 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த ஆண்டு 10.76 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்த குழுமம் 1.4 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா கார்ப்பரேஷன் கடந்த ஆண்டு 10.59 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்நிறுவனம் 10.38 மில்லியன் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் டைஹட்சூ, லெக்சஸ் உள்ளிட்ட பிராண்டுகள் செயல்படுகின்றன.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்தஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்தையே பிடித்துள்ளதுடன், முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிறுவனங்களைவிட அதிக வித்தியாசத்தில் இருந்து வருகிறது. செவர்லே, ஒபெல் உள்ளிட்ட கார் பிராண்டுகள் இந்த நிறுவனத்தின் கீழ் உள்ளன.

விற்பனையில் மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடிய ஃபோக்ஸ்வேகன்!

ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7.4 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி பார்த்தால், எதிர்காலத்தில் முதல் இடத்திற்கு ஹூண்டாய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen Group retains crown in global car sales.
Story first published: Friday, February 1, 2019, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X