மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி, டொயோட்டா, ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் வழியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

இந்தியாவின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி, டொயோட்டா, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சேவையை அண்மையில் தொடங்கி வைத்தன.

தற்போது, இந்நிறுவனங்களின் வரிசையில் பிரபல ஜெர்மன் நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனும் இணைந்துள்ளது.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

நாட்டின் மிக முக்கியமான வாகன விற்பனையாளர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் ஃபோக்ஸ்வேகன், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் விதமாக இந்த 'டூர் ஸ்டெப் சர்வீஸ்' திட்டத்தை அறிவித்திருக்கின்றது.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

அந்தவகையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களான போலோ, ஏமியோ, வென்ட்டோ மற்றும் டிகுவன் உள்ளிட்ட மாடல்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு திட்டத்தின்மூலம் ஃபோக்ஸ்வேகன் சேவையை வழங்க உள்ளது.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

ஆகையால், இனி மேற்கூறிய ஃபோக்ஸ்வேகன் மாடல் கார்களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி சர்வீஸ் நிலையங்களைத் தேடி சென்று நேரத்தை வீணடிக்கும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் இந்த சேவை, சர்வீஸ் செய்ய வேண்டிய கார்களை பிக்-அப் செய்து சர்வீஸ் செய்த பின்னர் டிராப் செய்யும் சேவையல்ல. குறிப்பிட்ட கார்களை சர்வீஸ் செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் அடக்கிய மினி சர்வீஸ் சென்டர் ரகத்திலான வாகனத்தின் மூலம் செய்யப்படும் ஓர் சேவையாகும்.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

இந்த சிறப்பான சேவையை நாட்டின் மிக முக்கியமான 45 நகரங்களில் தொடங்கியிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் மையம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 25 கிலோ மீட்டருக்கு உள்ளாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் அது முன் வைத்துள்ளது.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

இந்த சேவையில் குறிப்பாக பிரேக் டவுண் மற்றும் சாதாரண சர்வீஸ் போன்ற ஒரு சில சேவைகளை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கின்றது.

ஒருவேலை, மிக அதிகமான வேலை காருக்கு தேவைப்படுமானால், அந்த கார் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டுவருமாறு அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

MOST READ: 5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை.. மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா?

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

பொதுவாக, இதுபோன்று வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சேவை, அந்த சென்டர்களை அணுக முடியாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், வெகுதொலைவில் இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் வந்து காரை சர்வீஸ் கொடுத்துவிட்டு, மீண்டும் சில நாட்கள் காத்திருந்து காரை எடுத்துச் செல்வது மிக கடினமானதாக இருக்கும்.

MOST READ: இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

இதன்காரணமாகவே, பலர் தங்களின் வாகனங்களை சரிவர சர்வீஸ் விடுவதற்கு தவறிவிடுகின்றனர். ஆகையால், இதுபோன்ற சேவையை சர்வீஸ் மையத்தை அணுக முடியாத வாடிக்கையாளர்களை மையப்படுத்தி கொண்டு வந்தால் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன், மக்களிடையே நற்பெயரைப் பெறவும் உதவும்.

MOST READ: பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

அதுமட்டுமின்றி, இதுபோன்று நடமாடும் சர்வீஸ் மையங்களை அதிகப்படுத்துவதனால் தேவையற்ற இடங்கலில் சர்வீஸ் நிலையங்களை திறக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.

இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் நேரம் மற்றும் சென்றுவருவதற்கா செய்யப்படும் செலவீணங்கள் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.

மாருதி, டொயோட்டா, ஃபோர்டு வழியில் ஃபோக்ஸ்வேகன்... இனி சர்வீஸ் மேன்கள் வீடு தேடி வருவார்கள்...!

மேலும், குறிப்பிட்ட திட்டமிடலின்படி, ஒரே பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டால் ஒவ்வொரு முறையும் ஒரே பகுதிக்குச் சென்றுவரக்கூடிய அலைக் கழிப்பும் தவிர்க்கப்படும்.

Most Read Articles

English summary
Volkswagen Launched Doorstep Service. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X