ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் கார்ப்பரேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் முக்கிய விபரங்களை பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் காம்பேக்ட் செடான் ரகத்தில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் மற்றும் சர்வீஸ் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் பின்தங்கி இருக்கிறது. எனினும், ஜெர்மன் எஞ்சினியரிங்கை விரும்புவோரின் முதல் சாய்ஸாக இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் கார்ப்பரேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் கிடைக்கும் ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் இந்த கார்ப்பரேட் எடிசன் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடலானது லேபிஸ் புளூ, ரிஃப்ளெக்ஸ் சில்வர், கேண்டி ஒயிட்,டோஃபி பிரவுன் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. மேலும், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், கார்னரிங் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டமும் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் நாப் கூறுகையில்," எங்களது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரத்திலான பாதுகாப்பு, உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ காரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்கும்," என்று கூறியுள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!

பெட்ரோல் மாடலுக்கு ரூ.6.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டீசல் மாடலுக்கு ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற ஜாம்பவான்களின் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen has launched Ameo Corporate edition to cater corporate and business customers in India.
Story first published: Friday, April 12, 2019, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X