புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது ஸ்பை படங்கள் மூலமாக ஊர்ஜிதமாகி இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

ஃபோக்ஸ்வேகன் ஆலை அமைந்திருக்கும் புனே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து இந்த புதிய மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பை படங்களின் மூலமாக, போலோ காரில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் வருவது தெரிய வருகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

ஜிடி மாடலை போன்ற முன்புற, பின்புற பம்பர் இருக்கிறது. அதேபோன்று, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பின் வடிவமும் கூட ஜிடி மாடலை நினைவூட்டுவதாக இருக்கிறது. வெளிப்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

உட்புறத்திலும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கும். புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இன்பில்ட் நேவிகேஷன் வசதியுடன் வரும் என்று தெரிகிறது. ரியர் பார்க்கிங் கேமராவையும் இன்ஃபோடெயின்மென்ட் திரை சப்போர்ட் செய்யும்.. மற்றபடி, வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் முக்கிய மாற்றமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்படும். தற்போது 4 வகையான எஞ்சின் தேர்வகளில் கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

இரண்டாவது ஆப்ஷனாக, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொடுக்கப்படும். இந்த எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இரண்டிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

இதுதவிர்த்து, போலோ ஜிடி மாடல் இரண்டு வகையான எஞ்சின் தேர்வுகளில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதுள்ள 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படலாம். இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

அடுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரயும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மைலேஜிலும் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் சோதனை!

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் அமியோ கார்களும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
The next generation Volkswagen Polo facelift was spotted during standard road test at Pune. The new VW Polo facelift hatchback is likely be showcased at the 2020 Auto Expo.
Story first published: Wednesday, May 15, 2019, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X