2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது அடுத்த தயாரிப்பு மாடலான டி-ராக் எஸ்யூவியை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தி வருகிறது. இந்த புதிய கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் உள்ள ஃபோஸ்வேகன் நிறுவனத்தின் இந்த டி-ராக் மாடல், ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா காரோக் போன்ற மாடல்களுடன் இந்திய மார்க்கெட்டில் போட்டியிடவுள்ளது. ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்ற டி-ராக் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியூ முறையில்) இந்தியாவில் இறக்குமதி செய்தது.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த கார்கள் தான் இந்தியா சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. முழுவதும் இந்த கார் மறைக்கப்பட்டு இருந்தாலும் இதன் சில வெளிப்புற டிசைன்கள் தெரிய வருகின்றன. டி-ராக் மாடலின் முன்புற க்ரில் அமைப்பு நேர்த்தியாகவும், எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லைட்களை பக்கவாட்டிலும் கொண்டுள்ளது. இதனுடன் முன்புறத்தில் மஸ்குலர் பம்பர்ஸ், ஏர் இண்டேக்கிற்காக மிக பெரிய க்ரில் போன்றவையும் உள்ளன.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

காரின் பக்கவாட்டில் பார்த்தால், இந்த கார் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது தெரிய வருகிறது. பின்புறம் வரையில் ரூஃப் தண்டவாளங்கள், செங்குத்தான வடிவில் எல்இடி டெயில்லைட்ஸ் போன்றவை இந்த புதிய மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பர்ஸ் மிகவும் முரட்டுத்தனமான வடிவிலும் இதற்கு மத்தியில் ஸ்கஃப் ப்ளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

டி-ராக் காரை சுற்றிலும் சக்கரங்களின் அச்சிற்கு இணையாக கருமையான நிறத்தில் பார்டர் மிகவும் தடிமனாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர டி-ராக்கின் இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை பற்றி அறிய முடியவில்லை. இந்த ஜெர்மன் மாடல் காரில் இந்திய மாடல் கார்களை விட உட்புற வசதிகள் அதிகமாக தான் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

நமக்கு தெரிந்த வரை இந்த டி-ராக் காரில், 11.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டேஸ்போர்டு உள்பட கேபின் முழுவதற்கும் கருமையான நிறம், காரின் வெளிப்புற நிறத்தில் டேஸ்போர்டிற்கு பார்டர் போன்றவை வழங்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இயந்திர பாகங்களை பொறுத்த வரை, இந்த புதிய டி-ராக் மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த என்ஜின் 150 பிஎச்பி பவரை நிலையான 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளியிடும் திறன் கொண்டது.

2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியா 2.0 என்கிற ப்ராஜெட்டின் முதல் மாடலாக இந்த டி-ராக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த புதிய ப்ராஜெக்ட்டால் இந்தியாவில் இந்நிறுவனத்தை ஸ்கோடா நிறுவனம் வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Volkswagen T-Roc Spied Testing In India Ahead Of 2020 Launch: Spy Pics & Details
Story first published: Wednesday, November 27, 2019, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X