இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

வெளிநாட்டிலிருந்து அதிவேகத்தில் செல்லும் சூப்பர் கார்கள் வேகமாக இந்தியாவிலும் பரவி வருகின்றன. இத்தகைய கார்கள் குறிப்பாக ஆண்கள் தான் அதிகளவில் விரும்புவர். ஆனால் தற்போது அவர்களையும் தாண்டி பெண்களும் மிகவும் விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் இந்த சூப்பர் கார்களை வைத்திருக்கும் பெண்களை பற்றிய சிறிய அலசலை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

ஷில்பா ஷெட்டி- பிஎம்டபிள்யூ ஐ8

மெல்லிய உடல் எடையை கொண்டவர் என வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பல விலையுயர்ந்த கார்கள் உள்ளன. அதில் ஒன்று பிஎம்டபிள்யூ ஐ8 எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார். இந்த விலையுயர்ந்த காரை இந்தியாவில் வைத்திருக்கும் சிலரில் இவரும் ஒருவர். இந்த காரை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தான் அதிகளவில் பயன்படுத்துகிறார்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

பிஎம்டபிள்யூ ஐ8-ஐ பற்றி கூறினால், இதன் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் 228 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் என்ஜினுடன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை 129 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இக்கார் ஆனது 4.4 வினாடிகளிலேயே 0விலிருந்து 100 kmh வேகத்தை அடைகிறது. இக்காரின் அதிகப்பட்ச வேகம் 250 kmh.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

ஷீட்டால் டுகார்- லம்போர்கினி ஹுரக்கன்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கார்களில் இத்தாலியில் உருவாகும் லம்போர்கினியும் ஒன்று. கல்கத்தாவை சேர்ந்த 40 வயதான ஷீட்டால் டுகார் தான் இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் பெண்மணி. இவரது இந்த கார் கோல்ட் கலந்த ஒரொ எலியோஸ் என்கிற நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த லம்போர்கினி ஹுரக்கன் 5.2 லிட்டர் வி10 என்ஜினுடன் 8,250 ஆர்பிஎம்மில் 610 பிஎச்பி பவரையும் 6,500 ஆர்பிஎம்மில் 560 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0விலிருந்து இதன் வேகம் 100 kmh-ஐ வெறும் 3.2 வினாடிகளிலேயே அடைந்துவிடுகிறது. இக்காரின் அதிகப்பட்ச வேகம் 325 kmh ஆகும்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

ஹார்ட் கவுர்- ஃபெராரி 458 இத்தாலியா

மிக குறைந்த நபர்கள் தான் இந்தியாவில் ஃபெராரி காரை வைத்துள்ளனர். அதில் ஒருவர், ஹார்ட் கவுர் என அழைக்கப்படும் தரன் கவுர் திலோன். பாலிவுட்டில் ஹிப்பாப் பாடல்கள் மூலம் பிரபலமான இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

இவரது இந்த ஃபெராரி 458 இத்தாலியா கார், மரனெல்லோ என்கிற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஹார்ட் கவுர் இந்த காரை பிரபலமான பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் டீலரான பிக் பாய்ஸ் டாய்ஸ்(BBT)-யிடம் இருந்து வாங்கியுள்ளார்.

ஃபெராரி 458 இத்தாலியா, 4.5 லிட்டர் வி8 என்ஜினை கொண்டது. இந்த என்ஜின் 9,000 ஆர்பிஎம்மில் 562 பிஎச்பி பவரையும் 6,000 ஆர்பிஎம்மில் 540 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 7 நிலையான இரட்டை-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஃபெராரி 458 இத்தாலியா கார் ஆனது 3.4 வினாடிகளிலேயே 0-100 kmh வேகத்தையும், அதிகப்பட்சமாக 340 kmh வேகத்தையும் எட்டுகிறது.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

மல்லிகா ஷெராவத்- லம்போர்கினி அவென்ட்டடார் எஸ்வி

மிகவும் விலையுயர்ந்த அதேநேரத்தில் சக்தி வாய்ந்த கார்களில் இந்த லம்போர்கினி அவென்ட்டடார் எஸ்வியும் ஒன்று. இந்த காரை வெள்ளை நிறத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தை தவிர வேறும் யாரும் வைத்து இல்லை. இதை இவர் வாங்கும்போது விலை சுமார் ரூ.5 கோடியாம்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

மல்லிகா ஷெராவத் வைத்திருக்கும் இந்த கார் 6.5 லிட்டர் வி12 என்ஜினுடன் 740 பிஎச்பி பவரையும் 690 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் நான்கு சக்கரங்களிலும் 7 நிலையான செமி-ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த லம்போர்கினி அவென்ட்டடார் எஸ்வி வெறும் 2.8 வினாடிகளில் 0-100 kmh வேகத்தை அடைகிறது. இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 350 kmh.

Most Read:இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

சுவாதி பாகா- ஃபெராரி கலிபோர்னியா டி

டெல்லியில் அணுஆயுத பிரிவில் பணியாற்றும் சுவாதி பாகா அதிவேக கார்களை ஓட்டுவதன் மூலம் பிரபலமானவர். ஃபெராரி கலிபோர்னியா டி என்ற விலையுயர்ந்த காரின் உரிமையாளரான இவர், எஃப்430 ஸ்பைடர், ஃபெராரி 458 இத்தாலியா, பிஎம்டபிள்யூ இசட்4 மற்றும் ஜாகுவார் எஃப்-வி6எஸ் போன்ற அரிதான கார்களையும் வைத்துள்ளார்.

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

இந்த கலிபோர்னியா டி கார் அதிகளவில் விற்பனை செய்யப்படாததால், வெவ்வெறு உரிமையாளர்களின் கையில் இருந்து மாற்றப்பட்டு தான் வருகிறது. இதன் 3.9 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின், 553 பிஎச்பி பவரையும் 755 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 7 நிலையான இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வேகம் 3.6 வினாடிகளில் 0-100 kmh அடைகிறது. அதிகப்பட்ச வேகம் 315 kmh ஆகும்.

Most Read:மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

இந்தியாவில் மிக அதிவேக சூப்பர் கார் வைத்திருக்கும் மங்கைகள் இவர்கள் தான்..

சுமன் மேத்தா- லம்போர்கினி ஹுரக்கன்

சுமன் மேத்தா, இந்தியாவில் உள்ள எம்எல்ஏ ஒருவரின் மனைவி. மேத்தாவின் பிறந்தநாளிற்காக அவரது கணவர் ஆசையாக லம்போர்கினி ஹுரக்கனை பரிசாக வழங்கினார். சுமன் மேத்தா 2016ல் சாலையில் இந்த காரை ஓட்டி சென்ற போது ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றின் மீது மோதி பிரபலமடைந்தவர். இவரது இந்த லம்போர்கினி கார், அரான்சியோ பொரியாலிஸ் என்கிற பெயிண்ட் நிறத்தை கொண்டது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
supercars are still considered to be the domain of the men, at least in India. The times are changing though with a number of women in India who own and drive supercars. Let’s take a look at some of the women supercar owners in India.
Story first published: Saturday, September 28, 2019, 19:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X