புத்துயிர் பெற்ற அரிய வகை 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

1946ம் ஆண்டு மாடல் ஃபோர்டு ஜீப் புத்துயிர் பெற்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

பழமையான மற்றும் அரியவகை வாகனங்களுக்கு புத்துயிர் வழங்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகாமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதிலும், லாக்டவுண் ஆரம்பித்த காலத்தில் இது சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது. இதுகுறித்த செய்திகள் பலவற்றை கடந்த காலங்களில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டிருக்கின்றது.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

அதில், பிரிமியர் பத்மினி, அம்பாஸ்டர் உள்ளிட்ட கார்களே அதிகம். இவை புதிய அவதாரம் மற்றும் புத்துயிர் பெற்று மீண்டும் 1980ஸ் காலத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தின.

இந்நிலையில், 1946ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் ஜீப் தற்போது புத்துயிர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

இந்த ஜீப் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோவின் டீசல் எஞ்ஜினைக் கொண்டு இயங்கி வருகின்றது. தற்போது இது புத்துயிர் பெற்றிருப்பது பற்றிய வீடியோவை யுவிலாக் (YuVlogs/YouTube) எனும் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

வீடியோவில், வரலாற்று சிறப்புமிக்க 1946 ஃபோர்டு ஜீப் புத்துயிர் பெற்று வலம் வருவதைப் போன்ற காட்சியே முன்னதாக இடம் பெற்றிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஜீப்பிற்கு எம்மாதிரியான அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை ஓர் இளைஞர் விவரிக்கின்றார்.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

அவர்கள் கூறிய தகவலின்படி, ஜீப்-பிற்கு புத்துயிர் வழங்குவதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்தவகையில், செங்குத்தான ஸ்லாட்டுகளைக் கொண்டிருக்கும் ஃபிரண்ட் கிரில் மற்றும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

இத்துடன், ஜீப்பின் ரேடியேட்டரை எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அதனை ஃபிரண்ட் கிரில்லியே, வெளிப்பகுதியில் அவர்கள் பொருத்தியிருக்கின்றனர். இதையடுத்து, ஜீப்பின் கவர்ச்சியான தோற்றத்திற்காக லேசான பழுப்பு நிற பெயிண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீப் புத்துயிர் பெற்றிருப்பதை இந்த பெயிண்டிங் வேலையை உறுதிச் செய்கின்றது. இந்த பெயிண்டிங் பார்வையாளர்களைக் கவர்கின்ற வகையில் இருக்கின்றது.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

பெயிண்டிங் மட்டுமின்றி, வீல் மற்றும் டயர் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, ஆஃப் ரோடில் சவாரி செய்வதற்கு ஏதுவானதாக இருக்கின்றது. இதன் ரிம் பழைய மனம் மாறாத வகையில் ரெட்ரோ ஸ்டைலில் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, ஃபோர்டு லோகோ மற்றும் சாஃப்ட் டாப் மேற்கூரை உள்ளிட்டவையும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

இவை, 1946-ல் ஃபோர்டு ஜீப் எப்படி விற்பனைக்குக் கிடைத்ததோ அதே வாசத்தை தற்போதும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக ஜீப்பின் பின் பகுதி கதவு, அதில் இருக்கும் கூடுதல் வீல் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டு அப்படியே பொருத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

இவ்வாறு ஜீப்பின் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே உட்புறத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதனடிப்படையில், கருப்பு நிறத்தில் அதிக சொகுசை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இவை, ஜீப்பிற்கே உரித்தான தோற்றத்தை வழங்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் உயிர் பெற்ற 1946 ஃபோர்டு ஜீப்... கண்களை கொள்ளையடிக்கும் புதிய ஸ்டைல்... வீடியோ!

இதன் எஞ்ஜின் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மஹிந்திரா பொலிரோ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் சுமார் 8 மாதங்கள் வரை மாடிஃபிகேஷன் குழு செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இதற்கு ரூ. 3.35 லட்சம் வரை செலவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவில், ஜீப் புதிய அம்சங்களைப் பெற்றிருப்பதை வெளிக்காட்டும் வகையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கட்டமைத்தனர் என்பது பற்றிய காட்சிகளை அவர்கள் வெளியிடவில்லை. இருப்பினும், நாம் மறுக்க முடியாத வகையில் 1946 ஃபோர்டு ஜீப் அழகோவியமாக மாறியிருப்பதை இந்த வீடியோவின் மூலம் நம்மால் காண முடிகின்றது.

Most Read Articles

English summary
1946 Ford Jeep GPW Restored Video. Read In Tamil.
Story first published: Monday, July 20, 2020, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X