Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி, ஹூண்டாய் கார்களில் மறைந்துள்ள ஆபத்து... இதை டீலர்கள் உங்ககிட்ட சொல்ல மாட்டாங்க... அவ்ளோ மோசம்...
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 2 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ள கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது கார்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். இது உண்மையிலேயே நல்ல விஷயம். தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் ஏராளமான கார்கள் உச்சகட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 4 அல்லது அதற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அவை பெற்றுள்ளன.

அதே சமயம் ஒரு சில கார்கள் மிகவும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கைதான் பெற்றுள்ளன. எனினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவை மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த வகையில், அதிக எண்ணிக்கையில் விற்பனையானாலும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ள கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் சாண்ட்ரோ (Hyundai Santro)
ஆரம்ப விலை: 4.63 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், புது டெல்லி)
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், ஹூண்டாய் சாண்ட்ரோ கார் கடந்த 2018ம் ஆண்டு தனது இரண்டாவது தலைமுறை அவதாரத்தில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் லைன்அப்பில் விலை குறைவான கார்களில் ஒன்றாக சாண்ட்ரோ உள்ளது. 1.1 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகிறது.

அதே சமயம் ஆப்ஷனல் சிஎன்ஜி கிட் கிடைக்கிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்பிலும் ஹூண்டாய் சாண்ட்ரோ வெறும் 2 நட்சத்திரங்களை மட்டும்தான் பெற்றுள்ளது. ஆனால் இந்த கார் இந்திய சந்தையில் எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)
ஆரம்ப விலை: 4.45 லட்ச ரூபாய் (எக்ஸ்ஷோரூம், புது டெல்லி)
இந்திய சந்தையில் கிடைக்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற சிட்டி கார்களில் ஒன்று என மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை குறிப்பிடலாம். சிறிய பரிமாணங்கள் என்றாலும், உட்புறத்தில் விசாலமான இட வசதியை மாருதி சுஸுகி வேகன் ஆர் பெற்றுள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனும் கிடைக்கிறது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் வெறும் 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி வேகன் ஆர் பதிவு செய்து வருகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios)
ஆரம்ப விலை: 5.12 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், புது டெல்லி)
புதிய தலைமுறை ஐ10 காரை, கிராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ-டீசல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என பல்வேறு இன்ஜின் தேர்வுகளுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கிடைக்கிறது.

ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்பிலும் வெறும் 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. எனினும் ஒவ்வொரு மாதமும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கிராண்ட் ஐ10 நியோஸ் ஈட்டி தந்து கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
ஆரம்ப விலை: 5.19 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், புது டெல்லி)
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தனது செக்மெண்ட்டில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக இந்திய சந்தை அளவில் பார்த்தாலும், அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாக உள்ளது. கார் ஆர்வலர்கள் மத்தியிலும் கூட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. பிஎஸ்-6 சகாப்தத்தில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன் மட்டுமே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கிடைக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவருக்குமான பாதுகாப்பிலும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வெறும் 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. பாதுகாப்பில் குறைபாடுகள் உடன் இருந்தாலும் கூட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை, இந்திய வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

பாதுகாப்பான கார்கள் எவை?
மேற்கண்ட கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெறவில்லை என்றாலும், நாம் ஏற்கனவே கூறியபடி வேறு சில கார்கள் 5 மற்றும் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா அல்ட்ராஸ், டாடா நெக்ஸான் ஆகிய கார்கள், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன.

அதே சமயம் புதிய தலைமுறை மஹிந்திரா தார், மஹிந்திரா மராஸ்ஸோ, டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. கார்களின் பாதுகாப்பு வசதிகளில், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் சிறப்பான கவனம் செலுத்தி வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.