Just In
- 58 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
20 வருடங்களுக்கு பிறகு... இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஹிந்துஸ்தான் கான்டெஸா...
இந்திய சந்தையில் தனது தடத்தை பதிவு செய்துவிட்டு சென்ற கார்களுள் ஒன்றான ஹிந்துஸ்தான் கான்டெஸாவின் 20 வயதான 2000 மாடல் ஒன்று பத்திரமாக பாதுகாக்கப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 70, 80 மற்றும் 90ஆம் காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த கார் தயாரிப்பு நிறுவனமாகும். குறிப்பாக இதன் அம்பாசடார் மற்றும் கான்டெஸா கார்களுக்கு இப்போதும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதில் உலகளவில் பிரபலமான வோக்ஸ்ஹால் விக்டர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கான்டெஸா 1984-ல் இருந்து 2002 வரையில் தயாரிப்பில் இருந்தது. வெளிப்புற தோற்றத்தால் வாடிக்கையாளர்களால் அறியப்பட்ட இந்த செடான் ரக காரில் சவுகரியமாக ஐந்து நபர்கள் அமரலாம்.

இந்த பழமை வாய்ந்த காரை தற்போது பலர் வலை வீசி தேடி வருகின்றனர். ஏனெனில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இந்த தயாரிப்பை தற்போதும் சிலர் பாதுகாத்தும், சிலர் மாடிஃபை செய்து பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த வகையில் 20 வயதான 2000 ஹிந்துஸ்தான் கான்டெஸா கார் ஒன்று தகுந்த மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து ரெவோகிட் விலாக்ஸ் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ, காரின் வெளிப்புறத்தை காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த கான்டெஸா மாதிரி பெரும்பான்மையான ஸ்டாக் பாகங்களை இப்போதும் அப்படியே கொண்டுள்ளது.

மாடிஃபை மாற்றம் என்று பார்த்தால் சிவப்பு நிற காலிபர்கள் மற்றும் புதிய விங் மிரர்களுடன் 17 இன்ச்சில் சந்தைக்கு பிறகான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறம் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் முத்திரை உடன் கருப்பு நிறத்தில் க்ரில் பகுதியை கொண்டுள்ளது.

இந்த க்ரில்லை சுற்றிலும் கூடுதல் அழகிற்காக க்ரோமும், ஹெட்லைட்கள் வட்ட வடிவிலும் உள்ளன. முன் & பின்புறத்தில் உள்ள பம்பர்கள் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக சற்று தடிமனாக பொருத்தப்பட்டுள்ளன.

பக்கவாட்டில் ஜன்னல் மற்றும் கதவு ஹேண்டில்கள் உள்ளிட்டவை க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. காரின் பின்புறம் செவ்வக வடிவில் டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது. அப்படியே காரின் உட்புறத்திற்கு சென்றால், அங்கு ஏசி துவாரங்களுடன் தட்டையான டேஸ்போர்டு நமக்கு முதலாவதாக காட்சியளிக்கிறது.

இதன் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், மேனுவல் ஏசி கண்ட்ரோலை கொண்டுள்ளது. இருக்கைகள் கூடுதல் சவுகரியத்திற்காக திருத்தியமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதன் கேபினில் உள்ள சிடி மாற்றி ஆனது 12 சிடிகளை வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த காலத்து கார் என்பதை உணர்த்தும் விதமாக வழக்கமான மியுசிக் சிஸ்டமும் இதன் கேபினில் உள்ளது. அனலாக் தரத்தில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சில எச்சரிக்கை விளக்குகளை கொண்டுள்ளது. இந்த இண்டெஸா செடான் காரில் இஸுஸுவின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் பராமரிப்பு செலவு மற்றும் தற்போது கிடைக்கும் இதன் பாகங்கள் குறித்து இந்த வீடியோவில் உரிமையாளரிடம் கேட்டப்போது, இந்த காரின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதால் இதற்கான பல பாகங்கள் வேறு சில கார்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், சில பாகங்கள் தற்போதுவரை கிடைக்கவே இல்லை என கூறியவர், பராமரிப்பு செலவு மிகவும் அதிகமாக செல்வதால் இந்த கான்டெஸா காரை தினமும் பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.