2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதன்முறையாக பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

நிஸான் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான டட்சனின் இந்த பட்ஜெட்-ஹேட்ச்பேக் மாடல் சோதனை ஓட்டத்தில் எந்தவொரு சிறு விபரமும் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

இருப்பினும் இந்த 2020 ஹேட்ச்பேக் மாடலின் முன்புறம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது ஸ்பை புகைப்படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த பிஎஸ்6 கார் தயாரிக்கப்பட்டுள்ளதால் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவில்லை.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

அறிமுகத்தின்போது இந்த புதிய ரெடி-கோ பிஎஸ்6 கார் கூடுதலான எண்ணிக்கையில் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் தற்போதைய பிஎஸ்4 மாடலில் ஓட்டுனருக்கு பக்கவாட்டில் ஒரு காற்றுப்பை மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ரெடி-கோ ஹேட்ச்பேக்கிற்கு வெறும் ஒரே ஒரு நட்சத்திரை மட்டுமே உலகளாவிய NCAP அமைப்பு வழங்கியிருந்தது. ரூ.2.80 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த பிஎஸ்6 மாடல் 4-ஸ்டார் வரை பாதுகாப்பு மதிப்பெண்ணை பெறும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டுவரும் ரெடி-கோ மாடலின் பிஎஸ்4 வெர்சன் 0.8 லிட்டர், 1.0 லி மற்றும் 1.0 லி ஏஎம்டி என மூன்று பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கிறது. இதில் 0.8 லிட்டர் 799சிசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 53 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

மற்ற இரு 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் 999சிசியில் 67 பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகின்றன. ரெடி-கோ மாடலின் அனைத்து பெட்ரோல் வேரியண்ட் கார்களும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக கொண்டுள்ளன.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

சந்தையில் டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் மிகவும் குறைவான தொழிற்நுட்ப அம்சங்களை கொண்ட மாடலாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட்-ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்குதான் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

டட்சன் நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு ரெடி-கோ, கோ மற்றும் கோ+ என மூன்று மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மூன்று விற்பனை மாடல்களை மட்டும் தான் டட்சன் நிறுவனம் கொண்டிருந்தாலும், அதன் முன்னோடி நிறுவனமான நிஸான்-ஐ விட அதிகளவில் விற்பனை எண்ணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் பெற்று வருகிறது.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

ஏனெனில் இந்நிறுவனத்தின் கார்களுக்கு சில நேரங்களில் மாருதி ஆல்டோ 800 மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களை விட அதிகமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கிறது.

2020 டட்சன் ரெடி-கோ பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டம்..!

நிஸான் நிறுவனத்தின் வியாபார உத்தியின் அடிப்படையில் பட்ஜெட் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவரும் டட்சன் நிறுவனத்தின் மாடல்கள் அனைத்தும் ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதே கட்டமைப்பு ப்ளாட்ஃபாரத்தில் தான் ரெனால்ட்டின் க்விட் ஹேட்ச்பேக் மற்றும் ட்ரைபர் மினி-எம்பிவி கார்களும் தயாரிக்கப்படுகின்றன.

Source: Power Stroke PS/YouTube

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
2020 Datsun redi-GO Facelift Spied, Launch Soon
Story first published: Saturday, February 1, 2020, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X