2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

விரைவில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 2020 சிட்டி செடான் மாடலின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

முன்னதாக இந்த 2020 செடான் காரை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனாவில் தாமதமான கார்களில் புதிய ஹோண்டா சிட்டி மாடலும் ஒன்றாகிவிட்டது.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

டிசைன் மற்றும் தோற்றத்தில் தாய்லாந்து நாட்டு சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள புதிய சிட்டி மாடலை தான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 2020 ஹோண்டா சிட்டி மாடலும் பெருமளவு ஒத்து காண்ப்படவுள்ளது. இதனால் அந்நாட்டின் சிட்டி மாடலில் இருந்து வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் இந்த 2020 செடான் கார் கொண்டிருக்காது.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

அதேநேரம் ஹோண்டா அக்கார்டு மற்றும் சிவிக் மாடல்களில் இருந்தும் புதிய டிசைன்களை இந்த புதிய காரில் எதிர்பார்க்கலாம். இதன்படி ஸ்போர்ட்டியான ஸ்டைலில் முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள், பெரிய ரேடியேட்டர் க்ரில், தட்டையான மேற்கூரை மற்றும் புதிய டிசைனில் பம்பர்கள் உள்ளிட்டவை கொடுக்கப்படவுள்ளன.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

அதேபோல் புதிய இந்திய சிட்டி காரில் 16-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை இந்த காரின் முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இதன் டீசர் வீடியோ காரின் உட்புறத்தை ஹைலைட்டாக சுட்டி காட்டுகிறது.

புதிய தலைமுறை சிட்டி மாடல் ட்யூல்-டோன் நிற அமைப்பில் உட்புறத்தை பெற்றுள்ளது. இதன் கேபினில் முக்கிய அம்சங்களாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஏர் வெண்ட்ஸ், அதிக பக்கங்களை கொண்ட கண்ட்ரோல் டயல்ஸ், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்ஸ் மற்றும் சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

இதில் ஏர் வெண்ட்ஸ், ஸ்டேரிங் சக்கரம், கதவு மற்றும் கியர் ஹௌசிங்கில் க்ரோம் காணப்படுகின்றன. சந்தையில் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்திற்கு தேவை உள்ளதால் ஹோண்டா நிறுவனம் புதிய சிட்டி மாடலில் இணைய வசதிக்காக இ-சிம்மை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

இவை தவிர்த்து 4 காற்றுப்பைகள், க்ரூஸ் கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை அளவிடும் வசதி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் அலெக்ஸா உடன் 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தொழிற்நுட்ப அம்சங்களும் இந்த 2020 செடான் காரில் வழங்கப்பட்டிருக்கலாம்.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

இயக்கத்திற்கு இந்த புதிய காரில் 1.5 லிட்டரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்படவுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜினானது அதிகப்பட்சமாக 121 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

இதில் பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. டீசல் என்ஜின் உடன் ஒரே ஒரு 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் தான் வழங்கப்படவுள்ளது. பிஎஸ்6 டீசல் என்ஜின் மூலமாக 24.1 kmpl மைலேஜ்ஜை ஹோண்டா சிட்டி காரில் பெறலாம் என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றளித்துள்ளது.

2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? பதில், இந்த டீசர் வீடியோவில்...

ஆனால் இதன் பெட்ரோல் வேரியண்ட்கள் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் உடன் முறையே 18.4 kmpl மற்றும் 17.8 kmpl மைலேஜ்ஜை தான் வழங்கவல்லன. ரூ.10- 11 லட்சத்தில் ஆரம்ப விலையை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹோண்டா சிட்டி கார் மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மாடல்களுடன் விற்பனையில் போட்டியினை தொடரவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda City teaser video – Control car functions via Alexa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X