Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 ஹூண்டாய் ஐ20 காருக்கு 3 என்ஜின் தேர்வுகள்... அவை என்னென்ன? முழு விபரம் இதோ...
2020 ஹூண்டாய் ஐ20 என்ஜின் தேர்வுகள் வேரியண்ட் வாரியாக வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 2020ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 உள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை கார் தொடர்ச்சியாக இந்திய சாலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதை கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறோம்.

இதுகுறித்த ஸ்பை படங்கள் வெளியாகிவரும் நிலையில் தற்போது இந்த ஹேட்ச்பேக் காருக்கு வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் வேரியண்ட் வாரியாக இணையத்தில் கசிந்துள்ளன. டீம்பிஎச்பி செய்திதளத்தால் கிடைக்க பெற்றுள்ள இந்த ஸ்பை படங்களின் மூலம் புதிய ஹூண்டாய் ஐ20 13 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளதை அறிய முடிகிறது.

இந்த 13 வேரியண்ட்களும் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷன் என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் அடங்குகின்றன. இந்த 4 ட்ரிம் நிலைகளுக்கும் மூன்று என்ஜின் தேர்வுகள் 5 ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளன.

இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் அனைத்து ட்ரிம்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆனால் இதே என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு புதிய ஐ20-ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ட்ரிம்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் தற்போதைய ஹூண்டாய் ஐ20 காரில் 84 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. தற்போது இணையத்தில் கசிந்துள்ள ஆவண படங்களின் மூலம் பார்க்கும்போது 1.0 லிட்டர் டர்போ என்ஜின் தேர்வு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட போவதில்லை.

ஐஎம்டி மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த டர்போ என்ஜின் இதே ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன்தான் ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த டர்போ என்ஜின் வென்யூவில் 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தினாலும் 2020 ஐ20-ல் 100 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.

டர்போ மேனுவல் புதிய தலைமுறை ஐ20-ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ட்ரிம்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதேபோல் டிசிடி கியர்பாக்ஸ் உடன் டர்போ என்ஜின் ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஆ) ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கும்.

மூன்றாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்க பெறவுள்ளது. ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்க பெறாத இந்த டீசல் என்ஜின் ஹூண்டாய் வென்யூ, வெர்னா செடான் மற்றும் க்ரெட்டா கார்களிலும் வழங்கப்படுகிறது.

புதிய ஐ20-ன் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா (ஆ) ட்ரிம்களில் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் வென்யூவில் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. முந்தைய தலைமுறை காரை விடவும் அகலமாகவும், கூர்மையான பேனல்களுடனும், தாழ்வான மேற்கூரையுடனும் புதிய தலைமுறை ஐ20 ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகிவிட்டது.

அடுத்த தலைமுறை ஐ20 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் மாருதி சுஸுகி பலேனோ கார்கள் இதற்கு விற்பனையில் தொடர்ந்து போட்டியினை அளிக்கவுள்ளன.