போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

2020 மஹிந்திரா தார் வாகனத்திற்கான புதிய ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

மஹிந்திரா தார் இந்தியாவில் மிக சிறந்த அன்றாட பயன்பாட்டு ஆஃப்-ரோடு வாகனமாக விளங்கி வருகிறது. இந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக தாரின் இரண்டாம் தலைமுறை மாடல் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதற்கு பிறகு இந்த 2020 மாடலுக்கு ஆக்ஸஸரீகளை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. இருப்பினும் மீண்டும் விற்பனைக்கு பிறகான ஆக்ஸஸரீகள் 2020 தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகளின் மூலம் அளவுக்கு அதிகமான தேர்வுகளையே தாருக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளதை அறிய முடிகிறது.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

வெளிதோற்றத்தை மேம்படுத்தும் ஆக்ஸஸரீகள்

இதுகுறித்த லிஸ்ட்டில் முதலாவதாக டார்க் லார்ட் தொகுப்பு உள்ளது. இது வாகனத்தின் முன்பக்க பம்பர் க்ளாடிங், பம்பர் ஏர் டேம் தொகுப்பு, முன்பக்க க்ரில் க்ளாடிங், ஹெட்லேம்ப், கண்ணாடி, ஷோல்டர், வளைவு க்ளாடிங் மற்றும் டெயில்லேம்பிற்கான அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றை அடக்கியுள்ளது.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இந்த டார்க் லார்ட் தொகுப்பினை பெற வாடிக்கையாளர் ரூ.25,890 செலுத்த வேண்டும். இந்த தொகுப்பை க்ரோம் பிரியர்களுக்கும் பிடிக்கும். இதனுடன் வாகனத்தின் பக்கவாட்டிற்கான டிகால்ஸையும் மஹிந்திரா வழங்கியுள்ளது.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இது மற்ற சந்தைக்கு பிறகான டிகால்ஸை போன்று வாகனத்திற்கு அழக்கூட்டுவது மட்டுமின்றி வாகனத்தின் பக்கவாட்டு பேனல்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். இதன் காரணமாக இந்த ஆக்ஸஸரீக்கு தைரியமாக 1 வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ள மஹிந்திரா இதனை ரூ.3,260 செலுத்தி வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இசை அனுபவத்தை மேம்படுத்தும் ஆக்ஸஸரீகள்

உட்புறத்திற்கான ஆக்ஸஸரீகளாக 4-சேனல் ஆம்ப்ளிஃபையர், ஒலிபெருக்கி மற்றும் ஸ்பீக்கர் செட் கூறுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இரண்டாம் இருக்கை வரிசைக்காக மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் தேர்வையும் மஹிந்திரா வழங்கியுள்ளது. விலை குறைவான வேரியண்ட்களை வாங்கும்போது இரட்டை-டின் ஸ்டேரியோ ஹெட் யூனிட்டையும் வாடிக்கையாளர் பெறலாம்.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

பாதுகாப்பிற்கான ஆக்ஸஸரீகள்

பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக மஹிந்திரா நிறுவனம் ஹெட்ஸ் அப் திரை, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராக்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. வாகனத்தை முழுயாகவோ அல்லது பாதியாகவோ மூடுவதற்கு இரட்டை நிறத்தில் கவர்கள் இந்த லிஸ்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இவற்றுடன் கருப்பு நிறத்தில் 16 இன்ச் அலாய் சக்கரங்களை பெற கூடுதலாக ரூ.10,625-ஐ செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலை குறைவான வேரியண்ட்களின் வாடிக்கையாளர்கள் ரூ.1890ல் OE ரிமோட் பூட்டு ஃபாப்-ஐயும் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இவை தவிர, மஹிந்திரா இருக்கை உள்ளமைவு மற்றும் தரை பாய்களிலும் துவைக்கக்கூடியவை வகையிலான தேர்வுகளை வழங்குகிறது. மற்ற ஸ்மார்ட் ஆக்ஸஸரீகளில் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட சிற்றுண்டி தட்டு, துருப்பிடிக்காத ஸ்டீல் ஸ்கஃப் பிளேட், வினைல் தயாரிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் கவர், முன் மற்றும் பின்புற மட் ஃப்ளாப்ஸ், கதவுகளுக்கு கீழ் படிக்கட்டு மற்றும் காந்த சூரிய நிழல்கள் ஆகியவை அடங்குகின்றன.

போதும் போதும் என்றாலும் 2020 தாருக்கு ஆக்ஸஸரீகளை வாரி வழங்கும் மஹிந்திரா!! புதிய தொகுப்புகள் அறிவிப்பு

இவை மட்டுமின்றி கயிறு, வாகனத்தை இழுப்பதற்கான கொக்கி, வின்ச், வின்ச் கம்பி, எக்ஸாஸ்ட் ஜாக் போன்றவற்றை புதிய ஆக்ஸஸரீகளாக பெற்றுள்ள 2020 மஹிந்திரா தாரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.9.8 லட்சத்தில் இருந்து ரூ.13.75 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar Gets New List Of Official Accessories For Owners
Story first published: Tuesday, December 15, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X