18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை தார் மாடல் சமீபத்தில் தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

முழுக்க முழுக்க ஆஃப்-ரோட்டிற்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 2020 தார் மாடல் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த வகையில் தற்போது மீண்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 மாடலில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எச்எம்டி ஆட்டோவிலாக்ஸ் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ள ஸ்பை வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

இந்த அலாய் சக்கரங்களில் 255/65 ஆர்18 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தலைமுறை தார் மாடல் முற்றிலும் புதிய ஏணி வடிவிலான ஃப்ரேம் சேசிஸின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் தரமான ட்ரைவிங் டைனாமிக்ஸையும், மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடு திறனையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இரண்டாம் தலைமுறை தார் மாடல் சர்வதேச சந்தைக்காகவும் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியிருந்ததால் சில வெளிநாட்டு சந்தைக்களுக்கும் இந்த மாடல் செல்லவுள்ளது. இயக்கத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை இந்த 2020 மாடல் பெற்றுள்ளது.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இதன்படி புதிய தார் காரில் வழங்கப்படவுள்ள 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டது. இதன் டீசல் வேரியண்ட்டில் புதிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த இரு என்ஜின்கள் உடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளன. புதிய மஹிந்திரா தார் மாடலுக்கு விற்பனையில் போட்டியினை தர 2020 ஃபோர்ஸ் குர்கா மற்றும் மாருதி ஜிம்னி மாடல்கள் விரைவில் வருகை தரவுள்ளன.

18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த சோதனை மாதிரி காரை பார்க்கும்போது இது 2020 தார் மாடலின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் போல் தெரிகிறது. இதனால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் சந்தையில் எதிர்பார்க்கலாம். மஹிந்திரா தார் மாடலுக்கு ஏற்கனவே குறிப்பிடத்தகுந்த அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால் கூடுதல் ப்ரீமியம் தரத்தில் வெளிவரும் இதன் இரண்டாம் தலைமுறை கார் மூலம் கூடுதலான வாடிக்கையாளர்களை ஈர்க்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Thar spotted in production guise as launch nears
Story first published: Wednesday, July 8, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X