பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் தார், மிகவும் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவியாக திகழ்ந்து வருகிறது. இதன் புதிய தலைமுறை மாடலை, மஹிந்திரா தற்போது உருவாக்கியுள்ளது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், இன்ஜின் தேர்வுகளிலும் மஹிந்திரா தார் எஸ்யூவி பல்வேறு மாற்றங்களை பெற்று, தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல் முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அத்துடன் 2020 தார் எஸ்யூவி, அக்டோபர் 2ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியில், புதிய பம்பர், ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புத்தம் புதிய டெயில்லைட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

6 சீட்டர் மற்றும் 4 சீட்டர் என இரண்டு வகையான இருக்கை அமைப்புகளுடன் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கிடைக்கும். AX, AX ஆப்ஷனல் மற்றும் LX என மொத்தம் 3 மாடல்களில் புதிய தார் எஸ்யூவி வழங்கப்படுகிறது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மாடலில் பல்வேறு வசதிகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன்படி செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி, கீ-லெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

புதிய தார் எஸ்யூவியின் ஸ்டியரீங் வீலில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டேஷ்போர்டு முற்றிலும் புதிய லே-அவுட்டை பெற்றுள்ளது. பாதுகாப்பை பொறுத்த வரையில், முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ரோல் ஓவர் மிட்டிகேஷன் உடன் இஎஸ்பி, ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஹில்-டெசண்ட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கிடைக்கும். இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 152 ஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதே நேரத்தில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 132 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

டிரான்ஸ்மிஷனை பொறுத்த வரையில், இந்த இரண்டு இன்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுகளுடன் கிடைக்கும். புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கான முன்பதிவுகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. நடப்பு அக்டோபர் மாத இறுதியில் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா தார் எஸ்யூவியின் AX மாடலின் விலை 9.80 - 10.85 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் AX ஆப்ஷனல் மாடலின் விலை 11.90 - 12.20 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், LX மாடலின் விலை 12.49 - 13.75 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். புதிய தார் எஸ்யூவியின் விரிவான விலை விபரத்தை கீழே உள்ள படத்தில் நீங்கள் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது புதிய மஹிந்திரா தார்... விலை எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா தார் எஸ்யூவி இதுவரை கரடுமுரடான ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அதனுடன் சேர்த்து, சாதாரண சாலைகளில் தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே புதிய தார் எஸ்யூவி, மஹிந்திரா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar SUV Launched In India: Price, Features, Engine Specs, Variants, All Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X