2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தலைமுறை தார் மாடல் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன்மூலம் கூடுதலாக வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரோட்ஸ் & ராண்ட்ஸ் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்பை வீடியோவில் 2020 தார் மாடலின் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. வெளிப்புறத்தை போல் உட்புறமும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் ஸ்டேரிங் சக்கரத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் க்ரூஸ் (அல்லது ஆடியோ) கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

டேஸ்போர்டின் மைய கன்சோலில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பளிச்சிடுகிறது. தொடுத்திரையுடன் உள்ள இந்த சிஸ்டமானது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றை ஏற்க கூடியதாக இருக்கும்.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

இவற்றுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பல தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் உள்பக்கமாக இழுக்கக்கூடிய ஹார்ட்டாப் கூரை போன்றவற்றையும் புதிய தலைமுறை தார் மாடல் பெற்றுள்ளது.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

அதேபோல் முன்புறமாக பார்க்கப்பட்ட பின் இருக்கைகளை முதன்முறையாக பெற்றுள்ள 2020 தார் மாடலில் அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங்/சென்சார்ஸ் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

அப்டேட் செய்யப்பட்ட 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த 2020 மாடலின் டீசல் என்ஜின் மூலமாக 140 பிஎச்பி பவரையும், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலமாக கிட்டத்தட்ட 180 பிஎச்பி பவரையும் அதிகப்பட்சமாக பெற முடியும்.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

இந்த என்ஜின்களுடன் நிலையாக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும், கூடுதல் தேர்வாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் கொடுக்கப்படவுள்ளன. தற்போது சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ள தார் காரானது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் உள்ள டீசல் மாடலாகும்.

2020 தார் மாடலின் உட்புற கேபின் இவ்வாறு தான் இருக்கும்... வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்பை வீடியோ...

தனது ஆஃப்-ரோடு திறனினால் இந்திய சந்தையில் தனித்துவமான ஆஃப் ரோடு வாகனமாக மஹிந்திராவின் தார் மாடல் விளங்குகிறது. எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட வருகின்ற தார் மாடலின் புதிய தலைமுறைக்கு வாடிக்கையாளர்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் ஆகஸ்ட் மாத அறிமுகத்திற்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Soon-Launching Next Gen Mahindra Thar Gets Cruise Control
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X