தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

மஹிந்திராவின் புதிய பிஎஸ்6 வாகனமான டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் இந்திய சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

மஹிந்திரா நிறுவனம் அதன் விற்பனை மாடல்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகம் செய்ய தயாராக வைத்துள்ளது. அவை ஒவ்வொன்றாக இந்த வருடத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் அதற்கு தடையாக ஊரடங்கு உத்தரவுகள் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டுவிட்டன.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

இதனால் எப்போதோ அறிமுகமாக வேண்டிய 2020 மஹிந்திரா தாரின் அறிமுகம் இந்த அக்டோபர் மாத துவக்கத்தில்தான் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட டியூவி300 சப்-4 மீட்டர் எஸ்யூவி உள்ளிட்ட மாடல்கள் அடுத்தடுத்ததாக இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளன.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

இவற்றில் பிஎஸ்6 டியூவி300 சப்-4 மீட்டர் எஸ்யூவி தான் தற்போது சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் வீ கைடு ஆட்டோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

பிஎஸ்6 என்ஜின் மட்டுமின்றி சிறிய அளவிலான ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தையும் ஏற்று வரவுள்ள இந்த எஸ்யூவி கார் லேட்டஸ்ட் பாதசாரிகள் பாதுகாப்பு நியமங்களுக்கும் இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. டியூவி300 கார் மாடலுக்கு கடந்த 2019ஆம் ஆண்டிலும் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை மஹிந்திரா நிறுவனம் வழங்கியிருந்தது.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

இருப்பினும் இந்த சோதனை கார் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால், அப்டேட் செய்யப்பட்ட பம்பர் மற்றும் க்ரில் உடன் காரின் முன்பக்கம் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம். பொனெட்டிற்கு அடியில் வழக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் புதிய டியூவி300 பெற்று வரவுள்ளது.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

பிஎஸ்4 வெர்சனில் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்திய இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் இவற்றில் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வு புதிய டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கப்பட வாய்ப்புகள் குறைவே.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

2019 டியூவி300-ல் கீலெஸ் எண்ட்ரீ, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் 7.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை மஹிந்திரா நிறுவனம் வழங்கியிருந்தது. இவற்றுடன் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை ஹேங்கர் போன்றவற்றையும் புதிய டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

அதேபோல் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட்ட டியூவி300-ல் வழங்கப்படலாம். பிஎஸ்6 டியூவி300 காரை வரப்போகும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை குறிவைத்துவரும் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார்... மீண்டும் சாலை சோதனையில்...

டியூவி300 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை கடைசியாக ரூ.8.54 லட்சத்தில் இருந்து ரூ.10.55 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனை விட இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் விலை சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படலாம். டியூவி300-ஐ போல் இதன் எம்பிவி வெர்சனான டியூவி300 ப்ளஸிற்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்டை விரைவில் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra TUV300 BS6 Facelift Spied Again; Expected To Launch Soon
Story first published: Tuesday, October 13, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X