இந்திய சாலைகளில் பட்டை கிளப்ப வரும் 2 புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்கள்... அறிமுக தேதி விபரம்!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் இரண்டு புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்குதற்கு நாள் குறித்து விட்டது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். அந்த அசத்தலான இரண்டு உயர் வகை கார்களின் விபங்களையும், அறிமுக தேதியையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதி செயல்திறன் மிக்க கார் மாடல்களை மெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களின் அடிப்படையிலான மாடல்களை தவிர்த்து, மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டின் பொறியியல் வல்லமையை உணர்த்தும் விதத்தில் உயர்வகை மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டின் மிக உயர்செயல்திறன் மிக்க மாடல்களாக உள்ள மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடிஆர் மற்றும் சி63 ஏஎம்ஜி கூபே மாடல்கள் வரும் 27ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆன்லைன் மூலமாக இந்த இரண்டு கார்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

இதில், ஏஎம்ஜி சி63 கார் மாடலானது சி க்ளாஸ் சொகுசு காரின் அதிசெயல்திறன் மிக்க மாடலாகவும், விலை உயர்ந்ததாகவும். இதுவரை ஏஎம்ஜி செடான் ரகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் கூபே ரக வடிவமைப்பு கொண்ட மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

இந்த காரில் 4.0 லிட்டர் பை டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

இந்த காரின் எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

அடுத்து ஏஎம்ஜி பிராண்டின் பொறியியல் வல்லமைக்கு சான்றாக விளங்கும் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

இந்த காரில் 10.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

இந்த காரிலும் 4.0 லிட்டர் பை டர்போ வி8 எஞ்சின்தான் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 318 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை பொருந்தியது.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே, ஏஎம்ஜி ஜிடிஆர் கார்கள் அறிமுக விபரம்

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 கூபே மாடல் ரூ.1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏஎம்ஜி ஜிடிஆர் கார் ரூ.2.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிசெயல்திறன் மிக்க பெர்ஃபார்மென்ஸ் கார்களை விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை இந்த கார்கள் கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz has announced that it will launch two new high-performance car models in India on May 27.
Story first published: Friday, May 15, 2020, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X