2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டப்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியினை இனி இந்த செய்தியில் காண்போம்.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

வெளியாகியுள்ள பஸாத் பிஎஸ்6 மாடலின் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த புதிய கார் சில வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களை ஏற்றிருப்பது நமக்கு தெரிய வருகிறது. புதிய முன்புற பம்பர், கிடைமட்டமான க்ரோம் ஸ்லேட்டுகளுடன் உள்ள க்ரில் போன்றவை இந்த புதிய காரின் முன்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களாகும்.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் ஐக்யூ லைட் எல்இடி ஹெட்லைட்ஸையும் இந்த கார் பெற்றுள்ளது. காரின் மொத்த திறனை கணக்கிடுவதற்காக முன்புறம் மற்றும் பின்புற இருக்கைகளில் போலி மனித உருவங்களை இந்த சோதனை காரில் அமர்த்தியுள்ளனர். பின்புறத்தில் புதிய டிசைனில் டெயில் லேம்ப் க்ளஸ்ட்டரையும் ரீ-டிசைனில் பஸாத் என்கிற லோகோவை காருக்கு கிடைமட்டமாகவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பொருத்தியுள்ளது.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இந்த புதிய பஸாத் மாடலில் 17 இன்ச் அலுமினியம் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல வெளிநாட்டு சந்தைகளில் இந்த காரில் 18 இன்ச் மற்றும் 19 இன்ச் சக்கரங்கள் தேர்வுகளும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

காரின் உட்புறத்தில் நவீன தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ-சிம் மூலம் இணையத்தள இணைப்பை வழங்கக்கூடிய எம்ஐபி3 அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய டிஜிட்டல் காக்பிட் மற்றும் தொடுதல் மூலம் ஓட்டுனரை அடையாளம் கண்டறியும் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை இந்த காரின் உட்புறத்தில் தரப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களாகும்.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இதில் குறிப்பாக இந்த பிரத்யேக ஸ்டேரிங் சக்கரத்தை பெறும் முதல் ஃபோக்ஸ்வேகன் மாடல் பஸாத் தான். மேலும் தற்போதைய பஸாத் மாடலில் கூட இல்லாத சாம்சங் மொபைல் போன் மூலமாக கதவுகளை திறந்து காரை இயக்கும் வசதி இந்த புதிய காரில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

பாதுகாப்பு அம்சங்களாக முன்புறத்தில் வாகனங்களின் மீது மோதுவதற்கு முன்பாக எச்சரிக்கும் அமைப்பு, அவசரகால ப்ரேக்கிங், பாதசாரிகள் மீது மோதாமல் தடுக்கும் சிஸ்டம், பின்புற ட்ராஃபிக் அலார்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

தற்சமயம் விற்பனையாகிவரும் பஸாத் மாடலில் உள்ள நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 2.0 லிட்டர் பிஎஸ்4 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 3,600- 4,000 ஆர்பிஎம்-ல் 174 பிஎச்பி பவரையும், 1,500-3,500 ஆர்பிஎம்-ல் 350 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு ட்யூல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்துகிறது.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் மாடலில் கூடுதலாக 4 சிலிண்டர் அமைப்புடன் உள்ள 2.0 லிட்டர் டிஎஸ்ஐ, டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜினின் அதிகப்பட்ச வெளியிடும் ஆற்றல், 4,200-6,000 ஆர்பிஎம்-ல் 190 பிஎச்பி பவர் மற்றும் 1,500-4,100 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறன் ஆகும்.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படவுள்ளது. பிஎஸ்6 தரத்துடன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பஸாத் காருடன் அறிமுகமாகவுள்ள இந்த புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்ற விதத்தில் வெளியிடும் ஆற்றல் அளவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் பிஎஸ்6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

அமெரிக்கா ஏற்கனவே விற்பனையாகிவரும் பஸாத் மாடலில் எஸ், எஸ்இ, ஆர்-லைன் மற்றும் எஸ்இஎல் என நான்கு விதமான ட்ரிம் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை இந்திய மதிப்பில் ரூ25- 30 லட்சமாக அங்கு உள்ளது. பஸாத் மாடலின் இந்த புதிய பிஎஸ்6 காரின் அறிமுகம் இந்த ஆண்டு பிற்பகுதியில் இருக்கும் என தெரிகிறது.

Source: Rushlane

Most Read Articles

English summary
2020 Volkswagen Passat BS6 petrol front, rear spied near Pune
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X