புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி30 5 சீரீஸ் சலூன் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 2021ஆம் ஆண்டிற்காக அடுத்த மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் இரு லீக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உலகாளவிய அறிமுகம் ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நடத்தப்படவுள்ளது. ஏனெனில் தற்சமயம் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளதால் தற்போதைக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலாது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

5 சீரீஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரீஸ் கூபே மற்றும் ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் லீக் புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தன. ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இதன் 2017மை வெர்சனில் இருந்து பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

இருப்பினும் சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்களும் அதிகளவில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவற்றை உற்று கவனித்தால் மட்டுமே புலப்படும். க்ரில் அமைப்பு லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ ஃபேஷனில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

படத்தில் காட்டுப்பட்டுள்ள கார் எம் ஸ்போர்ட் பேக்கேஜ் உடன் உள்ள பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் மாடலின் 530இ ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் ஆகும். இதனை வெளிப்படுத்தும் விதமாக எம் பேட்ஜ் காரின் இரு ஃபெண்டர்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

5 சீரிஸ் மாடலுக்கான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் ஸ்டைலிங் பாகங்கள், காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு பதிலாக கூர்மையான தோற்றத்தை வழங்குகின்றன. இருப்பினும் பரிணாம அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

பிஎம்டபிள்யூ 530இ மாடல் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலமாக செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 250 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

இந்த என்ஜின் அமைப்புடன் ட்ரான்ஸ்மிஷனாக வழங்கப்பட்டுள்ள 8-ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆற்றலை பின் சக்கரத்திற்கு வழங்குகிறது. அதுவே எக்ஸ்ட்ரைவ் வேரியண்ட்டில் ஆற்றல் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

இதற்கிடையில் தயாரிப்பில் உள்ள இதன் ஹைப்ரீட் வேரியண்ட் குறித்து வெளிவந்துள்ள தகவலில் இந்த காரில் 400 பிஎப்சி பவரை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
BMW 5 Series facelift images leaked in internet
Story first published: Wednesday, April 29, 2020, 22:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X